சீரழிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்ய முன்வந்துள்ள தேரா சச்சா சவுதா அமைப்பினர்
சிர்சா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை தனது ஆதரவாளர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என தேரா சச்சா சவுதா என்ற சீக்கிய அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கிய அமைப்பு தேரா சச்சா சவுதா. அந்த அமைப்புக்கு ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தேரா சச்சா சவுதா அமைப்பு ஏற்கனவே 105 நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த எண்ணிக்கையை 106 ஆக ஆக்க எங்கள் குருஜி முடிவு செய்துள்ளார். அதாவது விருப்பம் உள்ள ஆதரவாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தான் அந்த புதிய திட்டம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லி மற்றும் கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்து வரும் பெண்களை மணக்க 1,400 தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆதித்யா இன்சான் கூறுகையில்,
பலாத்காரம் செய்யப்பட்டு குடும்பத்தாரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்க தேரா சச்சா சவுதா முடிவு செய்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட சில பெண்கள் குருஜியை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்புகிறார்கள். அந்த பெண்களை திருமணம் செய்ய எங்கள் அமைப்பின் ஆதரவாளர்கள் சம்மதித்துள்ளனர்.
முன்னதாக எங்கள் அமைப்பின் ஆதரவாளர்கள் 20 பாலியல் தொழிலாளிகள், 50 விவாகரத்தான பெண்கள் மற்றும் விதவைகளை திருமணம் செய்தனர் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications