தாண்டவாடும் வறட்சி..... நாடுவிட்டு நாடு போய் டான்ஸ் ஆட ரூ. 8 லட்சம் ஒதுக்கிய மகா. பா.ஜ.க. முதல்வர்!!
மும்பை: மகாராஷ்டிராவில் வறட்சி தாண்டவமாடும் நிலையில் மாநில முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தாய்லாந்து செல்லும் டான்ஸ் குழுவுக்கு ரூ.8 லட்சம் ஒதுக்கியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இது ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணிக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் டிசம்பர் மாதம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக அரசு ஊழியர்களை உள்ளடக்கிய நடனக் குழுவுக்கு அம்மாநில முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனில் கால்கலி என்ற சமூக ஆர்வலர் தாக்கல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவின் மூலம் இந்த தகவல் தெரியவந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் அக் குழுவுக்கு அளிக்கப்பட்ட தொகையை அரசு திரும்பப் பெற வேண்டும்; முதல்வர் பட்னாவிஸ் சொந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே முதல்வர் பட்னாவிஸ் அளித்துள்ள விளக்கத்தில், வறட்சி, நீர் பாதுகாப்பு திட்டம் மற்றும் கலாசார நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு தனித்தனியே முதல்வர் நிவாரண நிதிகள் உள்ளன.
இதில் இருந்து தான் நடன குழுவிற்கு நிதி ஒதுக்கினேன். நான் வறட்சி நிவாரண நிதியை பயன்படுத்தி விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications