பறவை காய்ச்சல் பீதிக்கு மத்தியில்... பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கிய தவான்.!
வாரணாசி: நாடு முழுவதும் பறவை காய்ச்சல் பயமுறுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தவான் படகு சவாரியின்போது பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தங்கள் படகுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை பறவைகளுக்கு உணவளிக்க அனுமதி கொடுக்கும் படகோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

நாடு முழுவதும் கொரோனா ஆட்டம் காட்டி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளா, சத்தீஸ்கர், அரியானா,மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதியாகி உள்ளது.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல மாநிங்களில் கோழிகள், பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறவை காய்ச்சல் பயமுறுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தவான் பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வாரணாசியில் படகு சவாரி செய்த தவான், படகில் இருந்தபடி அங்கு வரும் பறவைகளுக்கு உணவளிக்கிறார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை வெளியிட்ட அவர் ''பறவைகளுக்கு உணவளிப்பது எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் தவானின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கூறுகையில், ''சுற்றுலாப் பயணிகள் பொதுவாக பறவைகளுக்கு உணவளிப்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். சில படகோட்டிகள் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் படகுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை பறவைகளுக்கு உணவளிக்க அனுமதி கொடுக்கின்றனர். இனிமேல் இதுபோல் படகோட்டிகள் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும். படகு உரிமம் ரத்து செய்யபப்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications