போலீசிலிருந்து தப்பிக்க போட்ட திட்டமே திருப்பி தாக்கியது.. திலீப் செய்த 6 தவறுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் திலீப் கையும் களவுமாக சிக்க காரணமாயிருந்த 6 தவறுகள் வெளியாகியுள்ளது.

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள சூப்பர் ஸ்டார் திலீப் அண்மையில் கைது செய்யப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

திலீப்பின் இந்த நடவடிக்கையால் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கலாபவன் மணி கொலை வழக்கிலும் திலீப்புக்கு தொடர்பிருப்பதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முடிவுக்கு வரும் சினிமா வாழ்க்கை

முடிவுக்கு வரும் சினிமா வாழ்க்கை

திலீப்பின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ள நிலையில் அவர் மலையாள திரைத்துறை சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திலீப்பின் திரை வாழ்க்கை இதோடு முடிந்துவிடும் என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

6 தவறுகளால் சிக்கிய திலீப்

6 தவறுகளால் சிக்கிய திலீப்

இந்நிலையில் திலிப் போலீசில் சிக்க அவர் செய்த சில தவறுகளே காரணமாக இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக திட்டம் தீட்டியது முதல் புத்திசாலித்தனமாக எஸ்கேப்பான திலீப் ஒரு சில விஷயங்களில் கோட்டை விட்டதும் ஓவர் ஆக்டிங் செய்ததும் தான் அவருக்கு பாவனா கடத்தல் வழக்கில் தொடர்பிருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

விளக்க மறந்த திலீப்

விளக்க மறந்த திலீப்

முதலாவதாக பிளாக் மெயில் புகாருடன் திலீப் போலீசாரை அணுகினார். இரண்டவதாக பல்சர் சுனில் தன்னிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மீரட்டவதாக புகார் அளித்தார். ஆனால் எங்கே எப்படி மிரட்டினார் என்பதை விளக்க திலீப் மறந்துவிட்டார்.

வாயே திறக்கவில்லை

வாயே திறக்கவில்லை

மூன்றாவதாக மாரத்தான் விசாரணையின் போது திலீப் ஒரு முறை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்பாவியாக இருந்தால் நிச்சயம் கேள்வி கேட்டிருப்பார். ஆனால் திலீப் கேள்வி கேட்காதது போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

என்னைக் காப்பாற்றுங்கள்

என்னைக் காப்பாற்றுங்கள்

நான்காவதாக போலீசார் விசாணை நடத்தியபோது என்னைக் காப்பாற்றுங்கள் என தீலிப் கெஞ்சியுள்ளார். ஐந்தாவதாக திலீப்புக்கு எந்த அச்சுறுத்தலோ அல்லது மிரட்டகள் கடிதங்களோ பல்சர் சுனிலிடம் இருந்து வரவே இல்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஆதாரங்களை கைப்பற்றிய போலீஸ்

ஆதாரங்களை கைப்பற்றிய போலீஸ்

ஆறாவதாக பல்சர் சுனில் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறியிருந்தார் திலீப். ஆனால் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர். இவையெல்லாம் தான் பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புக்கு தொடர்பிருப்பதை அம்பலப்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The alleged mastermind behind the heinous actress attack case, Dileep, began plotting the crime about three years ago. But some missteps by the overconfident actor eventually led to his downfall.
Please Wait while comments are loading...