இதுவும் லிஸ்ட்டிலயே இல்லயே.. கருத்தடை செய்த 82 பேரில், 81 பேர் மீண்டும் கர்ப்பம்.. ஆபரேஷன் செய்துமா?
கான்பூர்: குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.. என்ன காரணம்?
கருக்கலைப்பு என்பது கருத்தரித்த பெண்கள் விரும்பி செய்து கொள்ளும் பாதுகாப்பான முறையாகும்.. அதுவும், மருத்துவர்களின் அறிவுரையோடு செய்து கொள்வது கூடுதல் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் அந்த பெண்ணுக்கு தருகிறது.

எனினும், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் பல பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதோடு உடல் ஆரோக்கியத்தையும் இழந்துவிடுவது உண்டு.
அபார்ஷன்: ஏனெனில் தானாக ஏற்படும் கருச்சிதைவை காட்டிலும் தூண்ட செய்து மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு அந்த பெண்ணுக்கு ஆபத்தை உண்டாக்க அதிகம் வாய்ப்புண்டு.
கருக்கலைப்புக்கு முதல் 20 வாரங்கள் வரை என்று கூறினாலும் கூட பாதுகாப்பானது என்றால் அது முதம் 12 வாரங்களுக்குள் என்கிறார்கள் டாக்டர்கள்.. எனவே, உடல் ஆரோக்கியம் கருக்கலைப்புக்கு உடல் தயாராக இருக்கிறதா? என்பதை மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டியிருக்கிறது..
சலுகைகள்: அதேபோல, குடும்ப கட்டுப்பாடு திட்டத்தையும் அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.. இதற்கான சலுகைகளையும், உதவிகளையும் செய்து வருகிறது.. ஆனால், பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சையை விட, ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை (வாசக்டமி) மிகவும் எளிதானது என்கிறார்கள்.. ஆனாலும் இதுபற்றின போதிய புரிதல்கள் இல்லாததால், தமிழகத்தில் ஆண்கள் பெருமளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வருவதில்லையாம்.
அதனால்தான், ஆண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. கடந்த 2022-23-ம் ஆண்டில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை (வாசக்டமி) தமிழகம் முழுவதும் 7,000 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெறும் 1,304 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாம்.
குடும்ப கட்டுப்பாடு : தமிழகம் போலவே பிற மாநிலங்களிலும் குடும்ப கட்டுப்பாடு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இதில் உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை, ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் இப்போது வரை, உபியில் அலிகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றிருந்தது.
இங்கு 2021-22ல் 4,800 பேரும், 2022-23ல் 5,240 பேரும், 2023-24 ல் 6,084பேரும், கருத்தடை அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார்கள்.. அதேசமயம், இந்த மாவட்டத்தில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 99 சதவிகிதம் பேர் மறுபடியும் குறிப்பிட்ட காலங்களுக்குள் கருவுறுவது வழக்கமாகவும் இருந்துள்ளது.
மருத்துவ அறிக்கை: இந்த பிரச்சனைகள் மீதான ஆலோசனை கூட்டம் அலிகர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர். நீரஜ் தியாகி தலைமையில் அலிகரில் நடைபெற்றது... இதன் மீதான மருத்துவ அறிக்கை குடும்பக்கட்டுபாடு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது...
அப்போதுதான், கடந்த 2010 முதல் 2023ம் ஆண்டுகள் வரையில் மொத்தம் 82 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதில், 81 பெண்கள் மறுபடியும் கருவுற்றது தெரியவந்துள்ளது.
ஆபரேஷன்: இத்தனைக்கும் அனைத்து அறுவை சிகிச்சையும் அரசு மருத்துவமனைகளில்தான் நடந்துள்ளது.. இந்த அந்த 81 பெண்களுக்கும் அரசு உதவித்தொகைகளும் அளிக்கப்படுகின்றன... அதுமட்டுமல்ல, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்த பிறகும், கருவுறும் பெண்களுக்கு தலா ரூ.60,000 அரசு சார்பில் தரப்படுகிறது..
இவற்றில் ரூ.30,000 உத்தரபிரதேச அரசாலும், மீதம் மத்திய அரசின் மருத்துவநலத் திட்டத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த சிகிச்சையில் பெண்கள் உயிர் நீத்தால், ரூ.2 லட்சமும் அளிக்கப்படுகிறது.
ஆக, ஆபரேஷன் செய்தும்கூட, எப்படி மீண்டும் கருவுற்றார்கள்? என்பதுதான் குழப்பம்மிகுந்த விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications