நாராயண் சாய்க்கு கள்ளக்காதலிகள் மூலம் 2 மகன்கள் உள்ளனர்: ஆசாராமின் மருமகள் திடுக் தகவல்
அகமதாபாத்: சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு கள்ளத்தொடர்புகள் மூலம் 2 மகன்கள் உள்ளதாக சாயின் மனைவி ஜானகி தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபு கடந்த 2013ம் ஆண்டில் இருந்து ஜோத்பூர் சிறையில் உள்ளார். பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட அவரின் மகன் நாராயண் சாய் 2013ம் ஆண்டில் இருந்து சூரத் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் சாயை கடந்த 1997ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகக் கூறும் ஜானகி ஹர்பால்னி(38) என்ற பெண் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கும், நாராயண் சாய்க்கும் கடந்த 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்ததில் இருந்தே அவருக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. 2 கள்ளக்காதலிகள் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சாயை நான் பிரிந்த பிறகும் அவரது ஆட்கள் என்னையும், என் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறார்கள். அவருடன் வாழ்ந்த காலத்தில் அவர் என்னை கொடுமைப்படுத்தியது மற்றும் ஜீவனாம்சம் கேட்டு நான் வழக்குகள் தொடர்ந்துள்ளேன்.
அந்த வழக்குகளை வாபஸ் பெறுமாறு அவரின் அடியாட்கள் என்னை மிரட்டி வருகிறார்கள். சாயும், அவரது தந்தையும் அடியாட்கள் மூலம் என்னை மனதளவில் சித்ரவதை செய்து வருகிறார்கள். அதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications