Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடையின்றி வீட்டில் நுழைந்த மனைவி.. அதிர்ந்த கணவர்.. ஐயோ, நீளும் "தலித்" துயரம்.. கொந்தளித்த முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: நள்ளிரவு நேரத்தில் நிர்வாண கோலத்தில் வீட்டிற்குள் நுழைந்த மனைவியை பார்த்து பதறிப்போனார் கணவர்.. பெண்களின் மீதான வன்முறை தாக்குதல்கள் நாளுக்கு நாள் வடமாநிலங்களில் அதிகரித்து வருவது பொதுமக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்மானிப்பது ஒரு மனிதனின் பிறப்பாகவே அமைந்து வருகிறது.. பிறப்பை அடிப்படையாக கொண்டுதான் சாதி வரையறுக்கப்படுகிறது..

Did Bihar Dalit woman attack and urinated mouth, brutality attacked by 6 people

நல்ல டிரஸ்: நல்ல உடையும் அணிய முடியாமல், விரும்பிய வாழ்க்கையை வாழ முடியாமல், விரும்பிய தொழிலையும் செய்ய முடியாமல், விரும்பிய பெண்ணையும் திருமணம் செய்ய முடியாமல், அவர்களின் மோசமான நிலைமை இன்னமும் நிலவுவது குறித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

2 மாதங்களுக்கு முன்புகூட, குஜராத்தில் ஒரு கொடுமை நடந்தது.. பனஸ்கந்தா என்ற மாவட்டத்தில் மோட்டா என்ற கிராமத்தில் ஜிகர் ஷெகாலியா என்ற பட்டிலியனத்தை சேர்ந்த இளைஞர் வசித்து வருகிறார்.. இவர் சம்பவத்தன்று, நல்ல டிரஸ் அணிந்து கொண்டு, சன் கிளாஸ்களையும் அணிந்து கொண்டு வெளியே சென்றுள்ளார்.. இதை பார்த்த அங்கிருந்த உயர் சாதியினருக்கு கோபம் வந்து, அவரை சரமாரியாக அடித்து நொறுக்கி, ஆடைகளை கிழித்தெறிந்தனர்.

கிராமம்: மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டம், ஹரேகான் என்ற கிராமத்தில், ஆடு ஒன்று திருடு போய்விட்டது என்பதற்காக, 20 வயதுடைய 4 பட்டியல் சமூக இளைஞர்கள் உட்பட 6 பேரை, மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு, கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கடந்த மாதம் கிளப்பியிருந்தது.

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவ அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், இதோ இன்னொரு கொடுமை பீகாரில் நடந்துள்ளது.

டார்ச்சர்: பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்த பட்டியலின பெண்.. பிரமோத் சிங் என்பவரிடம் இருந்து, இவரது கணவர், சில மாதங்களுக்கு முன்பு 1,500 ரூபாயை கடனாக வாங்கினாராம்.. இந்த கடனுக்கு வட்டியும் தந்தாகிவிட்டது, அசலும் தந்தாகிவிட்டது.. ஆனாலும், இன்னும் பணம் வேண்டும் என்று பிரமோத் சிங் டார்ச்சர் செய்துள்ளார்.. ஆனால், கடன் வாங்கிய பெண்ணின் கணவரைவிட்டுவிட்டு, அவரது மனைவிக்கு டாச்சர் தந்து வந்திருக்கிறார்.

எல்லா பணத்தையும் தந்துவிட்டதாகவும், இனி மேற்கொண்டு, பணம் எதுவும் தர முடியாது என்று அந்த பெண் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்... கூடுதல் பணம் தராவிட்டால், ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கிவிட்டு ஊரில் ஊர்வலமாக அழைத்து செல்வோம் என்று போனில் மிரட்டியிருக்கிறார் பிரமோத் சிங்..

கூடுதல் பணம்: இதனால், பயந்துபோன அந்த பெண் நேரடியாக போலீசில் சென்று புகார் தந்தார்.. ஆனால், அந்த புகாரின்பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்..
இதனிடையே, அதாவது கடந்த செப்டம்பர் 23ம் தேதி பக்கத்திலுள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றிருக்கிறார் இந்த பெண்.. ஆனால், நைட் நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.. பிறகுதான் தெரிந்தது, அந்த பெண்ணை, சுற்றிவளைத்த பிரமோத் சிங்கும், அவரது அவரது மகன் அன்ஷு மற்றும் 4 பேர் கொண்டகுழுவானது, அவரை வலுக்கட்டாயமாக தங்களது வீட்டிற்கு இழுத்து சென்றுள்ளது.

நிர்வாண கோலம்: வீட்டிற்குள் அந்த பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கியிருக்கிறது.. பிறகு, பெரிய பெரிய கட்டைகளை கொண்டு வந்து, அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியிருக்கிறது.. வாயில், சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளது.. அந்த பெண்ணின் வாயில் சிறுநீர் கழிக்கும்படி, தன்னுடைய மகனுக்கு ப்ரமோத் சிங் சொன்னாராம்.. உடனே மகன் அன்ஷு பெண்ணின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறான்..

இறுதியில் அவர்களிடமிருந்து தப்பிய பெண், தன்னுடைய வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் நிலைகுலைந்து வந்து சேர்ந்தார்.. வீட்டிற்கு நிர்வாணமாக ஓடிவருவதை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ந்து அலறியுள்ளது.. இதற்கு பிறகுதான், பெண்ணை அழைத்து சென்று புகார் தந்திருக்கிறார்கள்.. பிறகு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்..

நிலைமை சீரியஸ்: இப்போது அந்த பெண்ணுக்கு உடல்நிலை சீரியஸாக இருக்கிறதாம்.. தலையில் பலத்த காயம் அடைந்ததாக சொல்கிறார்கள்.. அதனால் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்..
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும், பட்டியலின அமைப்புகளை சேர்ந்தவர்களும் கொந்தளித்து போயுள்ளனர்.. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதற்குள் சம்பந்தப்பட்ட ப்ரமோத் சிங் உப்ட 6 பேருமே எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

முதல்வர் உறுதி: இதுகுறித்து பாட்னா மாவட்ட மூத்த எஸ்பி ராஜீவ் மிஸ்ரா சொல்லும்போது, "வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.. குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.. இதனிடையே, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதியளித்திருக்கிறார் என்றாலும், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளன.. இதனால், பீகாரில் அணல் அடித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+