கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகும்: திக்விஜய் கன்னட டிவி சேனல் எக்சிட் போல்
இன்றயை எக்சிட் போல் முடிவுப்படி பார்த்தால் 112 தொகுதிகளை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் திக்விஜய் கருத்து கணிப்புபடி 107 தொகுதிகளை அதிகபட்சமாக பாஜகவால் வெல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இன்று 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குப் பதிவுக்கு பிறகு பல்வேறு டிவி சேனல்கள் எக்சிட் போல் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

கர்நாடகாவில் வெளியாகும் முன்னணி தினப்பத்திரிகையான விஜயவாணி மற்றும் அதன் குழும டிவி சேனலான திக்விஜய் கன்னடா சேனல் ஆகியவை இணைந்து நடத்திய எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த எக்சிட் போல் முடிவுப்படி, பாஜகவுக்கு 103-107 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் 76-80 தொகுதிகளில் வெல்லும் என்றும், தேவகவுடாவின் மஜத 31-35 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறர் 4-8 தொகுதிகளில் வெல்ல முடியுமாம். 222 தொகுதிகளுக்குத்தான் இன்று தேர்தல் நடந்தது. ஜெயநகர் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை.
எனவே இன்றயை எக்சிட் போல் முடிவுப்படி பார்த்தால் 112 தொகுதிகளை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால் திக்விஜய் கருத்து கணிப்புபடி 107 தொகுதிகளை அதிகபட்சமாக பாஜகவால் வெல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. எனவே தனிப்பெரும் கட்சியாக பாஜக வர முடியுமே தவிர தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்கிறது.
மதசார்பற்ற ஜனதாதளம் கிங் மேக்கராக உருவாகுவது உறுதியாகியுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications