திக் விஜய் சிங்கின் மகள் கார்னிகா புற்றுநோயால் மரணம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்கின் மகள் கார்னிகா சிங், இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 37.
திக்விஜய் சிங்கின் மகளான கர்னிகா, சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதற்கு முன்னதாக, வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்றுவந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நோயின் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து டெல்லி சாக்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 5 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கார்னிகாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்குக்காக அவரது உடல், குஜராத் மாநிலத்தில் உள்ள திக்விஜய் சிங்கின் சொந்த ஊரான வத்வானுக்கு இன்று பிற்பகல் கொண்டு செல்லப்பட்டது.
திக்விஜய் சிங்கின் முதல் மனைவியும், கார்னிகாவின் தாயுமான ஆஷாவும் புற்று நோயால் 2013ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications