சக நடிகை ஆடை மாற்றுவதை மொட்டைமாடியில் தொங்கியபடி வெறித்து பார்த்த திலீப்.. திடுக்கிடும் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சக நடிகை ஆடை மாற்றுவதை மொட்டை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கியபடி பார்த்ததாக எழுத்தாளர் ரபீக் சீலட் தெரிவித்துள்ளார். திலீப்பின் இந்த கீழ்த்தரமான செயலின் போது தன்னிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டதை அவர் மறக்கமாட்டார் என்றும் ரபீக் சீலர் கூறியுள்ளார்.

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கச் சொன்னதோடு அவரை நிர்வாணமாக வீடியோ எடுக்கவும் கூறியிருந்தார் நடிகர் திலீப். இதில் தொடர்புடைய பல்சர் சுனில் போலீசாரிடம் சிக்கவே தற்போது உண்மைகள் வெளிபட்டு கம்பி எண்ணிக்கொண்டியிருக்கிறார் திலீப்.

இந்நிலையில் நடிகர் திலீப் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன. இயக்குநர்கள் வினயன், ஆர்எஸ் விமல் உள்ளிட்டோர் தங்கள் வாழ்க்கையில் திலீப் கொடுத்த இடையூறுகளை வெளிப்படுதினர்.

 எழுத்தாளரின் தகவல்

எழுத்தாளரின் தகவல்

இந்நிலையில் மலையாள திரைக்கதை எழுத்தாளர் ரபீக் சீலட் ஒரு திடுக் தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது ஒருமுறை எர்ணாகுளத்தில் ஷுட்டிங்கின் போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்தாராம் திலீப்.

 ஆடை மாற்றுவதை பார்த்த திலீப்

ஆடை மாற்றுவதை பார்த்த திலீப்

அப்போது படத்தின் சக நடிகை ஒருவர் ஆடை மாற்றுவதை நடிகர் திலீப் மொட் மாடியில் இருந்து தலைக்கீழாக தொங்கியபடி பார்த்துள்ளார். திலீப்புடன் இருந்த மற்றொரு நபர் அவர் தலைக்கீழாக பார்க்க அவரது கால்களை பிடித்துக்கொண்டிந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

 கையும் களவுமாக சிக்கினார்

கையும் களவுமாக சிக்கினார்

இதனை தான் பார்த்து விட்டதால் கையும் களவுமாக சிக்கிய திலீப் தனது வாழ்க்கை முடிக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். தான் கையும் களவுமாக பிடித்ததை திலீப் மறக்கமாட்டார் என்றும் ரபீக் கூறியுள்ளார்.

 இரக்கமற்ற பிறவி

இரக்கமற்ற பிறவி

திலீப் ஒரு இரக்கமற்ற பிறவி என்று கூறியுள்ள ரபீக் அவருடைய பழிவாங்கும் தாகம்தான் அவரது வாழ்க்கையை முடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். திலீப்பை பகைத்துக்கொள்பவர்களின் வாழ்கையை அவர் முடித்து விடுவதாகவும் ரபீக் குற்றம்சாட்டினார். திலீப் மஞ்சுவாரியர் விவாகரத்து குறித்து பேசுபவர்களையும் படத்தில் இருந்து அவர் நீக்கி வந்தார் என்றும் அவர் கூறினார்.

கலாபவன் ஷாஜன் மோதல்

கலாபவன் ஷாஜன் மோதல்

திரிஷ்யம் படத்தில் வில்லன் போலீசாக நடித்த கலாபவன் ஷாஜன் திலீப்பின் குஞ்சுகூனன் படத்தில் வில்லன் கதாபாத்திர்த்தில நடிக்க இருந்தார். ஆனால் அவர் நடித்த தான் வெளியேறிவிடுவதாக திலீப் மிரட்டியதையடுத்து காலபவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு வேறு ஒருவர் நடித்தார் என்றும் எழுத்தாளர் ரபீக் கூறினார். மலையாள சூப்பர் ஸ்டாரான திலீப் குறித்து நாள்தோறும் வெளியாகும் தகவல்கள் அம்மாநில திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rafeeque Seelat, a screenwriter said Dileep hanging upside down from the terrace of a hotel in Ernakulam, with another man holding his legs, in an attempt to see the woman inside the room changing her clothes.
Please Wait while comments are loading...