திருப்பதி - சீரடி இடையே நேரடி ரயில் போக்குவரத்தை தொடக்கி வைத்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
திருப்பதி: புனிதத் தலங்களான திருப்பதி-சீரடி இடையே நேரடி ரயில் போக்குவரத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திருப்பதியில் நேற்று துவக்கி வைத்தார்.
இந்தியாவில் முக்கிய புனித தலமமான திருப்பதி திருமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீவேங்கடேஸ்வரர் மற்றும் சீரடியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா தலத்துக்கும் ஏராளமான ஆன்மிகவாதிகள் ஆண்டு முழுவதும் சென்று வருகின்றனர். ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில் விரைவு ரயில் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, திருப்பதியில் நடைபெற்ற விழாவில் தொடக்கி வைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர், ஏற்கெனவே கூறியபடி ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் திருப்பதி - சீரடி இடையே திருப்பதி - சாய்நகர் சீரடி எக்ஸ்பிரஸ் என்னும் இந்த ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது.
அதன்படி ரயில் எண் 17417 திருப்பதி- சீரடி சாய்நகர் வாராந்திர விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் திருப்பதியில் காலை 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு சீரடி சென்றடையும். ஜனவரி 5 ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படும் என்றார்..
மேலும்,இதேபோல மறுமார்கத்தில் ரயில் எண் 17418 புதன்கிழமை தோறும் சீரடியில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருப்பதி சென்றடையும். இந்த ரயில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications