பூங்காவில் ஆரம்பித்த நாய்ச்சண்டை வீடு வரை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது... டெல்லியில்!
டெல்லி: டெல்லியில் பூங்கா ஒன்றில் நாய்க்காக நடந்த சண்டையின் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஹுமான்யூர் காலனியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு நேற்று மாலை தனது நாயை வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார் மாண்டி என்பவர். அப்போது அங்கு வந்த ரோஹித் என்ற இளைஞர் பூங்காவிற்குள் நாய்கள் அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து தனது நாயுடன் புறப்பட்டுச் சென்ற மாண்டி, இது தொடர்பாக தனது தாய் மற்றும் சகோதரரை பூங்காவிற்கு அனுப்பி, ரோஹித்துடன் சண்டை போட வைத்துள்ளார். இதனால், அந்த இடமே சிறிதுநேரம் பரபரப்பாக இருந்தது.
இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாண்டியின் அம்மாவையும், சகோதரரையும் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை புகாராக எழுதித் தரச் சொல்லியுள்ளனர்.
இதற்குள்ளாக ரோஹித் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மாண்டியின் வீட்டைக் கல்வீசித் தாக்கியுள்ளார். இதனால் மாண்டியும் அவரது சகோதரரும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ரோஹித் தரப்பு, மாண்டி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பெரும்பாலான துப்பாக்கிக் குண்டுகள் வீட்டுச் சுவரைத் தாக்கியபோதும், இந்த சம்பவத்தில் மாண்டியின் சகோதரர் சன்னிக்கும் காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள்ளாக தாக்குதல் நடத்திய கும்பல் தலைமறைவானது.
இந்த சம்பவம் மாண்டி வீட்டிற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதும் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ரவீந்தர் மற்றும் பிரசாந்த் என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான ரோஹித்தும், அவரது கூட்டாளிகளும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாய்க்காக நடந்த சண்டை துப்பாக்கிச் சூடு வரை போனதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications