கழற்றிவிடப்பட்ட காங்.. திடீரென மோடியை சந்தித்து பேசிய மம்தா! கவனிக்கும் ‛இந்தியா’ கூட்டணி.. பின்னணி
கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென்று சந்தித்து பேசினார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி விளக்கமளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வருகிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் மம்தா பானர்ஜி உறுதியாக உள்ளார்.

இதனால் அவர் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் இணைந்தார். இந்த கூட்டணிக்கு ‛இந்தியா' என்ற பெயரையே மம்தா பானர்ஜி தான் பரிந்துரை செய்தார். ஆனாலும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மம்தா பானர்ஜி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனால் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது இல்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவ உள்ளது. அதாவது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, மற்றும் காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கட்சிகள் என மும்முனை போட்டி நிலவ உள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்று திடீரென்று பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவர் இன்று மாலையில் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இந்த வேளையில் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்தார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால் பிரதமர் மோடி இன்றைய பொதுக்கூட்டத்தில் சந்தேகாலி வன்முறையை சுட்டிக்காட்டி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் சந்தேகாலி பிரச்சனைக்கு காரணமானவரும், நிலஅபகரிப்பு, பாலியல் புகாரில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகானை கைது செய்யக்கோரி பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இத்தகைய சூழலில் இந்த சந்திப்பு என்பது பலருக்கும் புரியாத புதிராக அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.
இந்த சந்திப்புக்கு பிறகு மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியை சந்தித்து ஏன்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி விளக்கமளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மாநில பிரச்சனைகளை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதோடு மாநிலத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் வந்தால் முதல்வராக இருப்பவர் சந்தித்து வரவேற்பது மரபாக உள்ளது. அதன்படி தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அரசியல் பேசவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பாக இது அமைந்தது'' என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications