"சித்தராமையா பயந்துவிட்டார்.." டிகே சிவக்குமார் பரபர பேச்சு.. ஷாக் ஆகி கேட்ட காங். எம்எல்ஏக்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கே துணை முதல்வராக இருக்கும் டிகே சிவக்குமார் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே பொம்மை தலைமையிலான பாஜக அரசை சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தியது. சித்தராமையா- டிகே சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் இணைந்து பாஜகவை வீழ்த்தியது.
தேர்தலுக்கு பிறகே, யார் முதல்வர் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. டெல்லி காங்கிரஸ் தலைமை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்த நிலையில், டிகே சிவக்குமார் முடிந்த வரை முயன்று பார்த்தார். இருப்பினும், அவருக்குத் துணை முதல்வர் பொறுப்பே வழங்கப்பட்டது.
சிவக்குமார்: முதல்வர் பதவியை எதிர்பார்த்து இருந்த சிவக்குமாருக்கு துணை முதல்வர் பொறுப்பு தான் கிடைத்தது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே டிகே சிவக்குமார் சமீபத்தில் கூறிய கருத்துகள் தான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசில் நிலவி வந்த அமைதியை இது மீண்டும் கலைத்துள்ளது.

முதல்வர் சித்தராமையா தனது முந்தைய ஆட்சியில் தொடர பயந்து ஒரு திட்டத்தைத் தானாக இருந்தால் எந்தவொரு அச்சமும் இல்லாமல் முன்னெடுத்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். விஜயநகரப் பேரரசின் தலைவரான முதலாம் கெம்பேகவுடாவின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுவது குறித்து தனக்குப் பல கோரிக்கைகள் வருவதாகக் கூறினார்.
அச்சம்: இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து அவர் பேசுகையில், "2017இல், முதல்வர் சித்தராமையாவும், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஜே. ஜார்ஜும், நகரில் மேம்பாலம் அமைப்பதற்கு எதிராக நடந்த போராட்டங்களுக்குப் பார்த்துப் பயந்தனர். அதே இடத்தில் நான் இருந்து இருந்தால் போராட்டக்காரர்களுக்கு எல்லாம் பயந்து இருக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
சிவக்குமார் இந்தக் கருத்துகளைக் கூறிய போது சித்தராமையா அங்கு இல்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி கலக்கல் வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், முதல்வர் சித்தராமையா குறித்து சிவக்குமார் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவரும் முதல்வர் பதவியைக் கேட்டனர். இதனால் காங்கிரஸ் தலைமை பல நாட்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டி இருந்தது. இறுதியில் இரண்டு தலைவர்களும் டெல்லி தலைமை முடிவை ஏற்றுக் கொண்டனர். அதன்படி சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இருவரின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டது.
காங்கிரஸ் என்ன சொல்கிறது: சிவகுமாரின் இந்த கருத்து குறித்துக் கேட்டதற்கு, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், "சித்தராமையா பயந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. பொதுமக்களின் கருத்துக்கு முதல்வர் சித்தராமையா அதிக முக்கியத்துவம் கொடுப்பார். சில நேரங்களில் பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்புவார்கள். இதுபோன்ற நேரங்களில் முடிவுகள் எடுக்கத் தாமதமாகும். துணை முதல்வர் சிவக்குமாரும் இதையே தான் சொல்ல வந்தார்" என்றார்.
இதுவரை சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே பெரியளவில் பிரச்சனை வந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், இருவருக்கும் இடையே விரைவில் பிரச்சினை வரும் என்று அங்குள்ள பாஜகவின் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications