ஜெ.க்கு பதவிப்பிரமாணம் செய்யக் கூடாது: ஆளுநருக்கு தே.மு.தி.க. வக்கீல் நோட்டீஸ்... பரபரப்பு!!
டெல்லி: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் முதல்வராக பதவியேற்பு செய்து வைக்கக் கூடாது என்று ஆளுநர் ரோசையாவுக்கு தே.மு.தி.க.வைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ். மணி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அம்மாநிலத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் ஆகியோரும் மேல்முறையீடு செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே மே 22-ந் தேதி சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்படுகிறது. இதில் ஜெயலலிதா, சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அன்றே மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து தே.மு.தி.க.வைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ். மணி என்பவர் ஆளுநர் ரோசையா, தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய 90 நாட்கள் அவகாசம் இருக்கிறது.
இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அதன் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைப்பது சட்டவிரோதமாகும். ஜெயலலிதாவுக்கு பதவியேற்பு செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications