ராஜ்யசபாவில் மீனவர்களுக்காக கூட்டாக குரல் கொடுத்த திமுக, அதிமுக எம்.பி.க்கள்
டெல்லி: இலங்கை கடற்படை கைது செய்த 18 மீனவர்களை விடுவிக்கக் கோரி திமுக, அதிமுக எம்.பி.க்கள் இன்று ராஜ்யசபாவில் மத்திய அரசை கேட்டுக் கொண்டார்கள்.
கடந்த 23ம் தேதி கடலில் மீன்பிடித்துக கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மேலும் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் இன்று ராஜ்யசபாவில் பேசினர்.

பூஜ்ய நேரத்தின்போது திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில்,
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலையாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி. ஆனால் அவர்களின் படகுகளை இலங்கை விடுவிக்கவில்லை. இலங்கை சிறைகளில் 24 மீனவர்கள் வாடி வருகிறார்கள். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 78 படகுகளை தங்கள் வசம் வைத்துள்ளனர். மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டால் தான் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
படகுகளை விடுவிக்குமாறு தான் இலங்கை அதிபரை கேட்டுக் கொண்டும் அவர் விடுவிக்கவில்லை என பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது போன்று பொறுப்பிலாமல் பேசுவதை ஆளுங்கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அதிமுக எம்.பி. எஸ். முத்துக்கருப்பன் பேசுகையில்,
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்யும் முன்பு அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்கியுள்ளது. மீனவர்களில் 3 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். மத்திய அரசு தான் மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொல்ல உத்தரவிட்ட விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை தமிழக தலைவர் ஒருவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்று தொழில் அதிபரும், நியமன எம்.பி.யுமான அசோக் எஸ். கங்குலி தெரிவித்தார்.
-
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
உடல் மெலிந்து.. 2 மாதத்திற்கு பின் அறிவாலயம் வந்த துரைமுருகன்! கைதாங்கலாக கூட்டிசென்ற பூச்சி முருகன் -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
“அதிமுகவுடன் சேர்த்து மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வச்சிட்டீங்களா?” - எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி! -
விட மாட்டேங்குறாங்க.. உள்ளே இருந்துகிட்டு கலகம்! கூட்டணி பேச்சில் இழுபறி.. திமுகவுக்கு பெரிய தலைவலி!












Click it and Unblock the Notifications