டெல்லியில் கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி பேரணி..33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி முழக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி அக்கட்சி மகளிர் அணியினர் பேரணி நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

டெல்லி மண்டிஹவுஸில் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

DMK MP Kanimozhi and their women's team held rally in delhi

மண்டி ஹவுஸில் இருந்து ஜந்தர்மந்தர் வரை திமுக மகளிர் அணியினர் பேரணியாக சென்றனர். கைகளில் இட ஓதுக்கீடு மசோதா குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச்சென்றனர்.

DMK MP Kanimozhi and their women's team held rally in delhi

பின்னர் ஜந்தர்மந்தரில் திரண்ட அவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி இப்போது இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட முடியும் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK women's team held rally in Delhi. they were urging to pass 33% reservation bill.
Please Wait while comments are loading...