திமுக- காங் பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்குகிறது... ராகுலை சந்திக்கிறார் ஸ்டாலின் மருமகன் சபரீசன்
டெல்லி: சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை திமுக பொருளாளர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்திக்க உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் தற்போதைய நிலையில் பல கட்சிகளைக் கொண்ட கூட்டணி உருவாகும் நிலை உள்ளது. தேமுதிக, பாஜகவை நோக்கி நகருவதாக கூறப்பட்டாலும் அது வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணிக்கு போவதற்கு சாத்தியங்கள் இருக்கிறது.
இதனால் எப்படியும் தங்கள் அணிக்கு தேமுதிக வராது என்பதை உறுதி செய்து கொண்டுள்ளது திமுக.

ராகுலை சந்திக்கும் சபரீசன்
இதனைத் தொடர்ந்து காங்கிரஸுடனான பேச்சுவார்த்தைகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரம் கேட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலிடத்தில் இருந்து பேச்சு
திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை கருணாநிதி, ஸ்டாலின் நடத்தி வந்த காலம் மலையேறிப் போய் ஹைடெக்கான அடுத்த தலைமுறை முதல் கட்ட பேச்சுக்களில் களமிறங்க ஆரம்பித்துவிட்டது. இம்முறை காங்கிரஸுடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக டெல்லி மேலிடத்தில் இருந்தே பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளதாம் திமுக.

குறுக்குசால் ஓட்டிவிட்டா...
வழக்கமாக தமிழகத் தலைவர்களுடன் முதலில் கூட்டணி குறித்து பேசப்படும். ஆனால் அப்படி பேசப்போய் ஆட்சியில் பங்கு என்றெல்லாம் குறுக்குசால் ஓட்டி கூட்டணி அமைவதில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் டெல்லிக்கு படையெடுப்பதைவிட அங்கிருந்தே பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டால் சிக்கல் இல்லை என்பது திமுகவின் கால்குலேஷன். இதற்காகத்தான் ராகுல் காந்தியிடம் நேரில் பேசிவிடுவது என திட்டமிட்டுள்ளதாம் திமுக.

இளங்கோவன் அதிருப்தி
தங்களுடன் நேரடியாக பேசாமல், டெல்லிக்குப் போய் திமுக பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது என்கிற தகவல் கிடைத்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்; ராகுல் காந்தியே முதல்வர் வேட்பாளர்; ராகுல் தமிழக முதல்வராக வேண்டும் என்று வெளுத்து வாங்கி வருகிறாராம் இளங்கோவன்...
ஆக விரைவில் க்ளைமாக்ஸ்?
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications