கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு டோல் கட்டணம் கிடையாது.. குஷியான அறிவிப்பு வெளியிடும் ம.பி. அரசு?
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் இனி தனியார் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த வேண்டியதில்லை என்கிற உத்தரவை அரசு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அம்மாநில வாகன பயன்பாட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் சுமார் 200 சாலைகள் மாநில போக்குவரத்து துறையின் கீழ் வருகிறது. இந்த சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த நெரிசலை தவிர்க்க சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த அம்மாநில அரசு முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய விதி
இதன் மூலம் தனியார் வாகன உரிமையாளர்கள் இனி டோல்கேட்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை. மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வரும் அனைத்து புதிய மற்றும் பழைய சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தும். இந்த புதிய விதிக்கான முன்மொழிவு இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து முதன்மைச் செயலாளர் நீரஜ் மாண்ட்லோய் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விதி அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின்னரே அமல்படுத்தப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் சில நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஒப்புதல்
இந்த முடிவை எடுப்பதற்கு முன், பொதுப்பணித்துறை மாநிலத்தில் உள்ள சுமார் 200 சாலைகளை ஆய்வு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில், 80 சதவிகித வனிக வாகனங்களும் 20 சதவிகிதம் தனியார் வாகனங்களும் சுங்க வரியை செலுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த 20 சதவிகிதம் வரி செலுத்தும் வாகனங்கள் நெரிசலில் நீண்ட நேரம் சிக்கி தவிக்கின்றன. தனியார் வாகனங்களைவிடவும் வனிக பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனவே இந்த சிக்கலை போக்க தனியார் வாகனங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வசூலிப்பு உரிமை
முன்னதாக பொதுப்பணித் துறையின் ஆய்வின் கீழ் எடுக்கப்பட்ட 200 சாலைகளும் மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தால் பில்ட் ஆபரேட் மற்றும் டிரான்ஸ்ஃபர் (பிஓடி) முறையில் அமைக்கப்பட்ட சாலைகளாகும். பிஓடி முறை என்பது சாலை அமைக்கும் தனியார் நிறுவனத்திற்கு அரசு அதற்கான தொகை வசூலித்துக்கொள்ள கான்டிராக்ட் முறையில் வசூலிப்பு உரிமையை குறிப்பிட்ட காலத்திற்கு அந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கும். அல்லது சாலை பராமரிப்பை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு வசூலிப்பு உரிமை வழங்கப்படும்.

ஜிபிஎஸ் கட்டண வசூல்
சாலை விதிகளை பொறுத்த அளவில் நாடு முழுவதும் இனி வரும் காலங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி இனி டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்கு பதில் நெடுஞ்சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் எவ்வளவு தூரம் நெடுஞ்சாலையை பயன்படுத்துகிறாரோ அவ்வளவு தொகையை அவர் கொடுக்க வேண்டும். இந்த கட்டண வசூல் முறையானது பல ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தற்போது மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications