கூரை கூட கிடையாது.. குடையின் கீழ் டீக்கடை.. 155 வகையான டீ..ஒரு கப் டீயின் விலை ரூ 1000.. அடேங்கப்பா!
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய டீக்கடையில் 100-க்கும் மேற்பட்ட வகையான தேநீர் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ரூ 12 முதல் ரூ 1000 வரை விற்கப்படுகின்றன.
கொல்கத்தாவின் முகுந்தபூரில் நிர்ஜாஷ் என்ற ஒரு சிறிய டீக்கடை உள்ளது. இங்கு ஒரு கப் டீ ரூ 1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைக்கு கூரை கூட கிடையாது, குடையையே கூரையாக வைத்து விற்பனை நடத்தப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் உட்காருவதற்கு சில பிளாஸ்டிக் சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிறிய கடையில் 4 விலையுயர்ந்த டீ வகைகள் உள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்ட டீ வகைகள் இங்கு கிடைக்கும்.

கிலோ விலை அதிகம்
இந்த கடையில் டீயின் விலை ரூ 12 முதல் ரூ 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. போ லே டீ இங்கு கிடைக்கும். இந்த டீத்தூள் கிலோ ரூ 3 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. சில்வர் நீடில் வைட் டீ, லாவெண்டர் டீ, ஹைபிஸ்கஸ் டீ , வைன் டீ, துளசி இஞ்சி டீ, ப்ளூ திசேன் டீ, ரூபயாஸ் டீ, ஓகாய்டி டீ உள்ளிட்ட தேநீர்களும் கிடைக்கும். இந்த டீத்தூள் கிலோ ரூ 10 ஆயிரத்திலிருந்து ரூ 35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

டீக்கடை
இதனாலேயே டீயின் விலை அதிகமாக உள்ளது. இந்த விலையுயர்ந்த டீயின் ருசி அதன் விலைக்கேற்ப சுவையாக இருக்கும். இந்த டீக்கடையின் பெயர் நிர்ஜாஷ். இகன் உரிமையாளர் ஒரு தனியார் துறையில் பணியாளராக பணியாற்றி வந்தார். பின்னர் தனது வேலையைவிட்டு விட்டு டீக்கடை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

2014 ஆம் ஆண்டு
சாதாரணமாக டீக்கடை வைக்காமல் அதிலும் வித்தியாசத்தை புகுத்தினார். இதையடுத்து 2014 ஆம் ஆண்டு டீக்கடை தொடங்கினார். அந்த வகையில் இவர் உலகெங்கும் கிடைக்கும் 155 வகையான தேநீரை ஒரு சிறிய ஸ்டாலில் விற்பனை செய்து வருகிறார். வாடிக்கையாளர்களும் விலை அதிகமாக இருந்தாலும் சுவையாக இருப்பதால் குடித்துவிட்டுதான் போகிறார்கள்.

விலை குறைந்த டீ
இதன் உரிமையாளர் பெயர் பார்த்தா பிரதீம் கங்குலி ஆவார். இந்த கடைக்கு வரும் மக்கள் விலை குறைந்த டீ முதல் விலையுயர்ந்த டீ வரை விரும்பி குடிக்கிறார்கள். இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளும் தங்கள் நாட்டு டீயை குடித்து மகிழ்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications