மேக்கப் மாமியார்.. ஆடிப்போன மருமகள்.. கவுன்சிலிங் தந்தும் அடங்கலியே.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ
கான்பூர்: மாமியார் மேக்கப் போட்ட விவகாரம் குறித்து, மேலும் சில கூடுதல் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. என்ன நடந்தது உத்தரபிரதேச மாநிலத்தில்?
ஆக்ராவில் மால்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. கல்யாணமாகி 8 மாதமாகிறது.. இவரும், இவரது தங்கையும், ஒரே வீட்டில் சகோதரர்களை திருமணம் செய்திருக்கிறார்கள். அண்ணன் - தம்பி இருவரும் பிரிந்துவிடாமல், குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அக்கா - தங்கை பெண்ணை தேடி மணம் முடித்திருக்கிறார்கள்.

திருமண வாழ்க்கை: 6 மாதம்வரை 2 ஜோடிகளின் திருமண வாழ்க்கையும் சந்தோஷமாகவே சென்றது.. அதற்கு பிறகுதான் பிரச்சனையே வெடித்துள்ளது.. மூத்த மருமகள் தன்னுடைய அறையில் நிறைய மேக்கப் செட்களை வாங்கி வைத்திருக்கிறார். ஆனால், திடீர் திடீரென மேக்கப் பொருட்கள் காணாமல் போவதாக உணர்ந்துள்ளார்.
புதிதாக வாங்கி வைத்த மேக்கப் பொருளையும் யாரோ உபயோகப்படுத்தியது போலவே இருந்திருக்கிறது. அதனால், தன்னுடைய தங்கையிடம் இதுபற்றி கேட்டிருக்கிறார். அதற்கு தங்கையோ, "நான் ஏன் உன் மேக்கப் கிட் எடுக்க போறேன்? அதுவும் திருட்டுத்தனமாக?" என்று கூறியிருக்கிறார். அந்த வீட்டில் இருப்பதே மொத்தம் 3 பெண்கள்தான்.. இருவரும் எடுக்கவில்லை என்றால், மாமியார் எடுத்திருப்பாரா? என்று சகோதரிகள் சந்தேகப்பட்டுள்ளனர்.
சிக்கிய மாமியார்: அதனால், மேக்கப் பொருளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.. அப்போதுதான், ஒரு நாள் மாமியார் மேக்கப் போடும்போது, இருவரும் பார்த்துவிட்டார்கள்.. அதுமட்டுமல்ல, மூத்த மருமகளின் மார்டன் டிரஸ்ஸையும், யாருக்கும் தெரியாமல் மாமியார் உடுத்தி வந்துள்ளார்..
இத்தனைக்கும் ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டு, வெளியில் எங்கியுமே மாமியார் போவதில்லையாம்.. வீட்டுக்குள்ளேயே தேவையில்லாமல் மேக்கப் போட்டு வீணடிப்பதால்தான் மூத்த மருமகளுக்கு கோபம் வந்துள்ளது.. எங்காவது அவசரத்துக்கு வெளியில் கிளம்பலாம் என்றால்கூட, மேக்கப் பொருட்கள் இருப்பதில்லையாம். மாமியாரே எல்லாவற்றையும் முகத்துக்கு அப்பிவந்துள்ளது தெரியவந்தது.
வாய் தகராறு: இதுதான் முதலில் வாய் தகராறாக வெடித்துள்ளது.. பிறகு வாக்குவாதமானது.. அடுத்து ரணகளமே ஆகிவிட்டது. மகன்களிடம் மருமகள்கள் பற்றி மாமியார் புகார் சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த 2 மகன்களும், மருமகள்களை அடித்து வீட்டைவிட்டே துரத்திவிட்டனர். இதற்கு பிறகுதான் குடும்ப நல ஆலோசனைக்குழுவினரிடம் சென்று டைவர்ஸ் கேட்டுள்ளார் மூத்த மருமகள்.
மாமியார் மேக்கப் போட்டதற்காக விவாகரத்து வாங்கலாமா? என்று கோர்ட்டில் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த மூத்த மருமகள், "இல்லை, மேக்கப் போட்டது மட்டும் காரணமில்லை, அம்மாவின் பேச்சை கேட்டு, தங்களை கணவன் அடித்து துன்புறுத்துகிறார், தினமும் டார்ச்சர் தாங்கவில்லை, தயவு செய்து டைவர்ஸ் தந்துடுங்க" என்றாராம். இதையடுத்து, 2 மருமகள்கள், 2 மகன்கள் மற்றும் மேக்கப் மாமியாரை கவுன்சிலிங்குக்கு கோர்ட்டில் அழைத்திருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications