சீதனமாக வந்த "சொம்பு.. ஒயின் ஷாப்புக்கு ஓடிய கணவர்.. பின்னாடியே வந்த விமலா.. அடுத்து புஷ்பா.. ஓ காட்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த குடும்ப தகராறு, கொலை வரை சென்றுள்ளது.. இது தொடர்பாக ரேபரேலி போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். எனினும், இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை அந்த பகுதி மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் நரசிங் யாதவ்.. சலோன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, உம்ரி என்ற கிராமத்தில் இவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்....

முதல் மனைவி பெயர் புஷ்பா.. இவருடன் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார் நரசிங் யாதவ். ஆனால், கடந்த 8 வருடங்களுக்கு முன்பு, விமலா என்பவரை 2வதாக கல்யாணம் செய்து கொண்டார்..
இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் சடலமாக கிடந்தார் நரசிங் யாதவ்.. இவரது மர்மமான மரணத்துக்கு காரணம் தெரியவில்லை.. அந்த பகுதி மக்களுக்கும் இது கொலையா? தற்கொலையா? என்று தெரியாமல் விழித்தனர்.
புஷ்பா சந்தேகம்: இப்படிப்பட்ட சூழலில், முதல்மனைவி புஷ்பா போலீசில் புகார் தந்தார்.. அதில், தன்னுடைய கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளதால், அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, போலீசாரும் நரசிங் யாதவ் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அப்போதுதான், நரசிங் யாதவ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறுதியானது...எனவே, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.. அப்போதுதான், நரசிங் யாதவின் கழுத்தை நெரித்து கொன்றது, இரண்டாவது மனைவி விமலா என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரதீப் குமார் சொல்லும்போது, "நரசிங் யாதவ் நீண்ட காலமாகவே குடிபோதைக்கு அடிமையானவர்.. இதனால், 2வது மனைவி, பிரதீப் குமாருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
தம்பதி தகராறு: இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடக்கும் என்று அந்த பகுதி மக்களும் சொல்கிறார்கள்.. சம்பவ நாளன்று மது குடிக்க காசு இல்லாமல் இருந்துள்ளார்.. அப்போது, தன்னுடைய வீட்டிலிருந்த "பித்தளை சொம்பு" நரசிங் யாதவ் கண்ணில் பட்டுள்ளது. இந்த சொம்பை எடுத்துச் சென்று, அடகு வைத்து, அந்த பணத்தில் தண்ணி அடித்துள்ளார்.
தண்ணி அடித்ததும் அல்லாமல், ஒயின் ஷாப்பிலிருந்து நேராக வீட்டுக்கு, சொம்பை விற்று மது குடித்ததாக விமலாவிடமே போதையில் உளறியிருக்கிறார்.. இந்த பித்தளை சொம்பு, விமலாவுக்கு அவருடைய அம்மா சீதனமாக கொடுத்து அனுப்பியதாம்.
ஆவேசம் விமலா: இதைக்கேட்டு கொந்தளித்துபோன விமலா, "தன்னுடைய தாய் வீட்டு சீதனமாக சொம்பை விற்று மது குடித்தே ஆகணுமா?" என்று கேட்டு கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.. ஆனாலும், போதையில் கண்டபடி உளறி கொட்டினார் நரசிங் யாதவ். இதனால், கோபமடைந்த விமலா, கணவரின் கழுத்தை நெரித்துவிட்டார்..
இதில், சம்பவ இடத்திலேயே நரசிங் யாதவ் துடிதுடித்து இறந்துள்ளார்.. தன் மீதான குற்றத்தையும் விமலா ஒப்புக்கொண்டார். .. அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்று போலீஸ் அதிகாரி பிரதீப் குமார் தெரிவித்துள்ளர்.
அதிர்ச்சி: இதனிடையே கைதான விமலாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, "குடிப்பழக்கம் நிறைந்த தன்னுடைய கணவர், கடந்த 8 வருடங்களாகவே குடிபோதையில் என்னை தாக்கி வந்தார்.. அதையெல்லாம்கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால், என் அம்மா ஆசையாக தந்த சொம்பை விற்று குடித்ததால்தான், கோபம் அதிகமாகிவிட்டது" என்று வாக்குமூலம் தந்துள்ளார். ஒரு சொம்புக்காக, ஒரு கொலை நடந்துள்ளது, ரேபரேலியில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications