நைட் நேரம்.. கிணற்றிலிருந்து வெளியே வந்த ஜோடி.. ஆஷாவின் முகத்தையே விடிய விடிய பார்த்து.. ஐயோ கொடுமை

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சடலம் பக்கத்திலேயே உட்கார்ந்து, அந்த முகத்தை விடிய விடிய பார்த்து கொண்டிருந்தாராம் கணவர்.. இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது..
கணவன்மார்களிடம் சிக்கி சீரழியும் அந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.. சில மாதங்களுக்கு முன்பு,

மத்திய பிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்தது.. சிங்க்ராலி மாவட்டத்தில் மடா என்ற கிராமத்தில் 55 வயதான நபர் வசித்து வருகிறார்.. இவரது மனைவிக்கு 35 வயதாகிறது.. மனைவியின் நடத்தை மீது அந்த கணவனுக்கு நிறைய சந்தேகம் இருந்து வந்துள்ளது.. தான் ஒரு தவறும் செய்யவில்லை என்று அந்த பெண் கதறியும், கணவன் கேட்கவில்லை. சம்பவத்தன்று, மனைவியை கயிறுகளால் இறுக கட்டிப்போட்டுவிட்டு, ஒரு ஊசியை எடுத்து வந்து, மனைவியின் அந்தரங்க உறுப்பு பகுதியை தைத்து விட்டார்..

Do you know why did Chhattisgarh police arrest drunkard husband, and happened to his wife

கயிறுகள்: அந்த பெண் கதறி துடித்து, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டுள்ளனர்.. அப்போது, தலைமறைவான கணவன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை தேடினர்.. அதற்கு பிறகு அதே மத்திய பிரதேசத்தில் ஜியோ பூர் மாவட்டத்தில் சென் ஹாஸ்டல் என்கிற பகுதியில் மற்றொரு சம்பவம் நடந்தது. குடிக்க பணம் கேட்டும் மனைவி தராத ஆத்திரத்தினால், கணவன், அவரை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார். மனைவியின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, அவரது கை, கால்களையும் கயிறுகளால் இறுக்கி கட்டிப்போட்டார்..

பிறகு, வீட்டில் இருந்த பெவிக்குவிக் எடுத்து வந்து மனைவியின் அந்தரங்கப் பகுதியில் ஊற்றி கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார். இதில் மனைவி வலி தாங்காமல் அலறி கத்தி உள்ளார்.. இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்தனர்.. ஆனால், அந்த கொடூர கணவன் மீது என்ன நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதோ இன்னொரு கொடுமை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.. ஜாஸ்பூரைச் சேர்ந்த தம்பதி சங்கர் ராம் - ஆஷா பாய்..

கிணற்றில் தற்கொலை: சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. பின்னர் உடலுறவுக்கு கணவன் அழைத்துள்ளார்.. ஆனால், மனைவி மறுத்ததுடன், தனக்கு தூக்கம் வருவதாகவும் சொல்லி உள்ளார்.. ஆனால் தொடர்ந்து கணவன் கட்டாயப்படுத்தவும், தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. மனைவியை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளார் சங்கர் ராம்.. இதில் வேதனையடைந்த மனைவி, துக்கம் தாளாமல், வீட்டருகில் இருந்த கிணற்றில் ஓடிப்போய் குதித்துவிட்டார்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர் ராம்,

Do you know why did Chhattisgarh police arrest drunkard husband, and happened to his wife

பின்னாடியே ஓடிச்சென்று, அதே கிணற்றில் குதித்து, மனைவியை உடனடியாக காப்பாற்றிவிட்டார். 2 பேரும் பத்திரமாக கிணற்றிலிருந்து வெளியே வந்தனர்.. ஆனால், மறுபடியும் மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தினார் சங்கர் ராம்.. மறுபடியும் மனைவி மறுத்துள்ளார்.. மறுபடியும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஆஷாவை தாக்கியுள்ளார் சங்கர் ராம்... ஒருகட்டத்தில், மனைவியின் பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கடுமையாக தாக்கியதில் அந்த பெண் அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.. ஆஷாவின் சடலத்தை பார்த்ததுமே, சங்கர் ராம் பயந்துபோய்விட்டார்..

ஜெயிலில் கணவர்: சடலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல், அந்த சடலம் பக்கத்திலேயே இரவு முழுவதும் உட்கார்ந்து, ஆஷாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்திருக்கிறார்.. மறுநாள் காலையில், ஆஷா உயிரிழந்த சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்து, பிறகு போலீசுக்கு சொல்லி உள்ளனர்.. போலீசார் விரைந்து வந்து, சங்கர் ராமை கைது செய்து விசாரித்தபோதுதான், மேற்கண்ட தகவல்களை எல்லாம் போலீசில் சொல்லி உள்ளார்.. இப்போது சங்கர் ராம் கைதாகி ஜெயிலில் உள்ளார்.. கொடூரமாக அடித்தே மனைவியை கொன்ற இந்த சம்பவம் சத்தீஸ்கரில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+