Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அது" எதுக்கு.. தொட்டிக்குள்ள எட்டிப்பாத்தால் அந்த பொண்ணு.. திருதிருன்னு நின்ற கணவர்.. உறைந்த போலீஸ்

விசாரணை ஒன்றிற்காக வீட்டிற்குள் நுழைந்த போலீசுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: விசாரணை ஒன்றுக்காக விரைந்து சென்ற போலீசாருக்கு, பெருத்த அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.. ஒரு வழக்கு, இன்னொரு வழக்கில் கொண்டுவந்து விட்டுள்ளது.. கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவம் பரபரபத்து வரும்நிலையில், அதுதொடர்பான மேலும் கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.. என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாகவும், அதை ஒருவர் வீட்டிற்குள்ளேயே அச்சடித்து விநியோகிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டதில், பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாபூர் என்ற பகுதியை சேர்ந்தவர் பவன்சிங் தாக்கூர் என்பவர்தான், வீட்டிலே மிஷின்களை வைத்து, ரூ.500, 2000 கள்ளநோட்டுகளை அச்சடிப்பதாக மோப்பம் பிடித்தனர் போலீசார்.

 பெட்ரூம் பாத்ரூம்

பெட்ரூம் பாத்ரூம்

அதனால், அவரை கையும் களவுமாக பிடிக்க நேரடியாகவே பவன்சிங் வீட்டிற்கு விரைந்தார்கள் போலீசார்.. திடீரென வீட்டிற்குள் புகுந்து ஒருஇடம் பாக்கி இல்லாமல் சோதனை போட்டார்கள்.. தங்களுக்கு கிடைத்த தகவலின்படியே, அந்த வீட்டில் பணம் அச்சடிக்க பயன்பட்ட பிரிண்டர் போன்ற கருவிகள் சிக்கின.. எனினும், வேறு ஏதாவது இது தொடர்பாக மறைத்து வைத்திருக்கிறாரா என்று போலீசார் அந்த வீட்டிற்குள்ளேயே சோதனையை விரிவுபடுத்தினார்கள்.. அந்த வீட்டின் பெட்ரூமுக்குள் நுழைந்தனர்.. அப்போது, அந்த ரூமில் இருந்த பாத்ரூமுக்குள்ளிருந்து திடீரென துர்நாற்றம் வீசியது.

 பீஸ் பீஸ் பாகங்கள்

பீஸ் பீஸ் பாகங்கள்

ஆனால், பவன்சிங் கள்ள ரூபாய் நோட்டு அச்சடிப்பது குறித்து மனைவி, அடிக்கடி தகராறு செய்யவும், ஏற்கனவே சந்தேகப்பிடியில் சிக்கி ஆத்திரத்தில் இருந்த பவன்சிங்குக்கு இதுவும் சேர்ந்து கொண்டதால் கொலை வரை சென்றதாக சொல்கிறார்கள். சம்பவத்தன்றுகூட, குழந்தைகள் இருவரையும் தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்கிறார்.. அதற்கு பிறகுதான், மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.. கொலைசெய்துவிட்டு, ஒரு கட்டிங் மெஷினை வாங்கி வந்து மனைவியின் உடலை வெட்டி, புதிதாக வாங்கி வந்த தண்ணீர் தொட்டியில் போட்டு மறைத்து வைத்துள்ளார்.

 பாத்ரூம் டப் டப்

பாத்ரூம் டப் டப்

எப்ப பார்த்தாலும், இந்த விஷயம் தொடர்பாக பேசிக்கொண்டும், அறிவுறுத்தி கொண்டும் இருந்தாராம்.. அதனால் கடுப்பான பவன்சிங் மனைவியை கொன்றுள்ளார்.. முதலில், மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார்.. பிறகு, அவைகளை தன்னுடைய வீட்டில் உள்ள காலியான தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார்.. ஆனால் இந்த கொலை 2 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது.. இத்தனை நாளாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.. பிரிண்ட்டிங் மிஷின் எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை சோதனையிட்டபோதுதான், துர்நாற்றம் பாத்ரூமில் இருந்து வீசியது. அப்போதுகூட வீடு முழுவதும் சோதனை நடத்தியும் சடலத்தை கண்டுபிடிக்கவில்லை..

 தண்ணீர் தொட்டி

தண்ணீர் தொட்டி

தண்ணீர் தொட்டியில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசவும்தான், அதற்குள் போலீசார் எட்டிப்பார்த்துள்ளனர்.. மனைவியை துண்டு துண்டாக வெட்டிவிட்டு, அந்த துண்டுகளை வெவ்வேறு இடங்களில் வீசியெறியவே பவன்சிங் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவருக்கு அதற்கெல்லாம் டைம் இல்லையாம்.. நேரமின்மை காரணமாக, அதை செய்ய முடியாமல், வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, கள்ளநோட்டு அச்சடித்தால், கொலை செய்துவிடுவதாக அந்த பெண் கணவனை மிரட்டியிருக்கிறார்.. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அவர் ஒருமுறை போலீசிலும் புகார் தந்துள்ளார்..

 5 + 5 பீஸ்

5 + 5 பீஸ்

ஆனால் போலீசார் அப்போது இதை கண்டுகொள்ளாமல் நிலைமையை சமாதானப்படுத்தினார்களாம்.. 15 நாட்களுக்கு முன்பு, மனைவியின் உறவினர்களில் ஒருவர், அவரை சந்திக்க வந்துள்ளார்.. அப்போது அவர் வீட்டில் இல்லாததால், தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், விரைவில் திரும்பி வருவார் என்றும் பவன்சிங் அவரிடம் சொன்னாராம்.. இதுகுறித்து பிலாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் சொல்லும்போது, "மனைவியை கொன்ற பிறகு, சடலத்தை மறைப்பதற்காகவே, குற்றம் சாட்டப்பட்டவர் தண்ணீர் தொட்டி மற்றும் கட்டர் இயந்திரத்தை புதிதாக வாங்கியிருக்கிறார்..

 கருகும் வாடை

கருகும் வாடை

அந்த தொட்டியின் அளவுக்கு ஏற்றவாறு, பெண்ணின் உடலை 5 பாகங்களாக வெட்டி, தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார்.. ஒருவேளை தீ வைத்தால், அவர் மாட்டிக் கொள்ளலாம் என்று பயந்தார். அதனால், அந்த தண்ணீர் தொட்டியிலேயே உடல்பாகங்களை மறைக்க முடிவு செய்தார். இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்வதற்காகவே, தன்னுடைய 2 குழந்தைகளையும் தகத்பூர் கிராமத்தில் உள்ள தன்னடைய பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துள்ளார்.. இப்போது, நடத்திய சோதனையில் கலர் பிரிண்டர், நகல் எடுக்கப்பட்ட தாள்கள், 500 மற்றும் 200 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 பளீர் வெளிச்சம்

பளீர் வெளிச்சம்

மேலும் 2 பேரிடம் போலி நோட்டுகளை அச்சிடுவது குறித்து பயிற்சியும் எடுத்து, அதற்கு பிறகு கள்ள நோட்டு அச்சடிப்பது குறித்து, அனைத்து தகவல்களையும் இணையத்தில் சேகரித்துள்ளார்.. பின்னர், மெல்ல மெல்ல கள்ள நோட்டுக்களை அச்சடிக்க துவங்கியுள்ளார்" என்றார்... போலி நோட்டுகள் வழக்கின் விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு இந்த கொலையின் கொடூரமான விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

 லவ் மேரேஜ்

லவ் மேரேஜ்

அதுமட்டுமல்ல, தன்னுடைய மனைவியை விரட்டி விரட்டி காதலித்துதான் திருமணம் செய்து கெண்டாராம் பவன்சிங். அந்த பெண்ணின் வீட்டில், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. அனைவரையும் மீறிதான் திருமணம் செய்திருக்கிறார்கள்.. அதனால், இவர்களுடன், யாருமே பேசுவதுமில்லையாம்.. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்றநிலையில், திடீரென மனைவியின் நடத்தையில் பவன்சிங்குக்கு சந்தேகம் எழுந்துள்ளது.. இது தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வந்துபோயுள்ளதாம்.

 கட்டிங் மெஷின்

கட்டிங் மெஷின்

ஆனால், பவன்சிங் கள்ள ரூபாய் நோட்டு அச்சடிப்பது குறித்து மனைவி, அடிக்கடி தகராறு செய்யவும், ஏற்கனவே சந்தேகப்பிடியில் சிக்கி ஆத்திரத்தில் இருந்த பவன்சிங்குக்கு இதுவும் சேர்ந்து கொண்டதால் கொலை வரை சென்றதாக சொல்கிறார்கள். சம்பவத்தன்றுகூட, குழந்தைகள் இருவரையும் தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்கிறார்.. அதற்கு பிறகுதான், மனைவியை கழுத்து நெறித்து கொன்றுள்ளார்.. கொலைசெய்துவிட்டு, ஒரு கட்டிங் மெஷினை வாங்கி வந்து மனைவியின் உடலை வெட்டி, புதிதாக வாங்கி வந்த தண்ணீர் தொட்டியில் போட்டு மறைத்து வைத்துள்ளார்.

 வெளுத்த சாயம்

வெளுத்த சாயம்

மனைவியின் குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை என்பதால், அதுவே பெரிய பிளஸ் ஆகிவிட்டது.. அதனால், அந்தப் பெண் குறித்து யாருக்கும் தகவல் தெரியாமலேயே இருந்துள்ளது.. குழந்தைகளும் வீட்டில் இல்லை என்பதால் பக்கத்து வீட்டினருக்கும் சந்தேகம் வரவில்லை... அதையும் மீறி யாராவது மனைவி எங்கே என்று கேட்டால், அவர் அம்மா வீட்டுக்கு போயிருப்பதாக சமாளித்து வந்திருக்கிறார்.. ஆனால், கொலை செய்து 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், எப்படி துர்நாற்றம் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்பதுதான் புதிராக உள்ளதாம்.. இன்னும் விசாரணை, பவன்சிங்கிடம் நடந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+