நெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம்

டாக்டர் தம்பதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: காரை வழிமறித்து, கார் கண்ணாடியை இறக்க சொல்லி, நெருக்கத்திலேயே நின்று, டாக்டர் தம்பதியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் ஒரு கொடூரன்.. ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் நடந்த இது குறித்த பதற வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது.

Recommended Video

    நெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம்

    காலையில் இருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. பகல் நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.. அதில் ஒரு காரும் வந்து கொண்டிருக்கிறது.

    அப்போது, பைக்கில் வந்த 2 பேர் காருக்கு குறுக்கே வந்து பைக்கை நிறுத்துகிறார்கள்.. அதில் ஒருவர் சிறுவன்.. 15, 16 வயசுதான் இருக்கும்.. இன்னொருத்தர் முகத்தை அடையாளம் தெரியாதவாறு துண்டால் கட்டி உள்ளார்.. பைக்கை நிறுத்தியதும், அடையாளம் தெரியாத நபர் அதில் இருந்து இறங்கி, கார் அருகில் செல்கிறார்.. கார் கண்ணாடியையும் தட்டுகிறார்.

     துப்பாக்கி

    துப்பாக்கி

    காரின் கண்ணாடி இறக்கப்படுகிறது.. டக்கென துப்பாக்கி எடுத்து, மிக நெருக்கத்தில் டமார் டமார் என சுட்டுவிட்டார்.. அந்த சிறுவன் இதை அருகில் இருந்தபடியே பார்க்கிறான்.. மொத்தம் 5 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, ஓடிவந்து பைக்கை எடுத்து கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.. இதுதான் அந்த வீடியோ..!

     ஜெய்ப்பூர்

    ஜெய்ப்பூர்

    ஜெய்ப்பூரில் உள்ள பாரத்பூரில், சாயங்காலம் 4.45 மணிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சுதீப் குப்தாவும் அவரது மனைவி சீமா குப்தாவும்.. இவர்கள் டாக்டர் தம்பதிகள்.. இவர்களை ரொம்ப நேரமாகவே அந்த 2 பேரும் பின்தொடர்ந்து வந்துதான் காரை மடக்கி நிறுத்தி சுட்டுள்ளனர். இதற்கு காரணம் முன்விரோதம் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

     கொலை

    கொலை

    2 வருஷத்துக்கு முன்பு, தீபா தேவி என்ற 25 வயது பெண்ணையும், அவரது 6 மாத குழந்தையையும் கொலை செய்த வழக்கில் இந்த டாக்டர் தம்பதிகள் கைதாகி உள்ளனர்.. இவர்கள் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.. எனவே, அந்த முன்விரோதம் காரணமாகவே பழிக்குப்பழியாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டாக்டருடன் உறவு வைத்திருந்ததால், அந்த இளம்பெண்ணை கொன்றதாக கூறப்படுகிறது.

    கேமரா

    கேமரா

    துப்பாக்கியால் சுட்டது அநேகமாக, கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் அண்ணன் என்றும் சொல்கிறார்கள். இப்போதைக்கு இருக்கும் ஒரே வலுவான ஆதாரம் இந்த சிசிடிவி காட்சிகள்தான்.. இதை வைத்துதான், குற்றவாளிகள் யார் என்று அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகிறார்கள்.. விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..

    குஷ்பு

    குஷ்பு

    நடந்த இந்த சம்பவத்துக்கு பாஜகவின் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைகள் அதிர்ச்சி அளிக்கிறது என்றும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் நம்புவதாக ட்வீட் போட்டுள்ளார்.

     என்னாச்சு?

    என்னாச்சு?

    குஷ்பு அத்துடன் விடவில்லை.. அம்மாநில முதல்வருக்கு டேக் செய்து, அசோக் கெலாட்ஜி, உங்க மாநிலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்வியும் கேட்டுள்ளார்.. அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.. உண்மையிலேயே மாநிலத்தில் என்ன நடந்தது என்று அக்கறையுடன் பாஜகவின் குஷ்பு விசாரிக்கிறாரா? அல்லது இவரை சீண்டிவிட்டு பதிவு போட்டுள்ளரா தெரியவில்லை..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+