கர்நாடகாவில் 25 கார்களுக்கு தீ வைத்த மருத்துவர்

Subscribe to Oneindia Tamil
கர்நாடகாவில் 25 கார்களுக்கு தீ வைத்த மருத்துவர் கைது
BBC
கர்நாடகாவில் 25 கார்களுக்கு தீ வைத்த மருத்துவர் கைது

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் பல நாட்களாக மருத்துவர் ஒருவர் 25 கார்களுக்கு தீ வைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் அமீத் கெய்க்வாட், ஹெல்மெட் அணிந்துகொண்டு பல்வேறு கட்டிடங்களுக்குள் நுழையும் சிசிடிவி பதிவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது காரணமின்றி செய்த செயலா அல்லது மன நோய் தொடர்பான விவகாரமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசியிடம் பேசிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.

எரிக்கப்பட்ட கார்களில் பதின்மூன்று கார்கள் பல்வேறு மருத்துவர்களுக்குச் சொந்தமானது என்றும், அந்த மருத்துவர்களுக்கும் கெய்க்வாட்டிற்கு எந்தவித வெளிப்படையான தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தில் போட்டித்தன்மையோ அல்லது பதற்றமோ இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

"அவர் தொழில் ரீதியாக நல்ல ஆசிரியர் என்று பெயரெடுத்துள்ளார்'' என்று பிபிசி இந்தியிடம் பேசிய அதிகாரி ஒருவர் கூறினார்.

"அவர் பணியாற்றிய அலுவலகத்திலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்."

37 வயதான கெய்க்வாட் ஜனவரி மாதம் 17ம் தேதியன்று பாதுகாவலர் ஒருவரால் பிடிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட அதே நாளில் 10 கார்களை எரித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், கர்நாடகாவின் வேறு இரண்டு மாவட்டங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் அவர் மேலும் 15 கார்களுக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவங்கள் ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதியன்று நடந்ததாக காவல்துறையினர் நம்புகின்றனர்.

டாக்டர் கெய்க்வாட், கற்பூரத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி வாகனத்தில் காற்று வெளிச்செல்லும் பகுதிக்கு கீழே தீ வைப்பார்.

இது, தீப்பிழம்புகள் உட்புற கம்பிகளை கடந்து, கார் எஞ்சினை அடைந்து சேதத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் மீது வேண்டுமென்றே தீ வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதுடன், காவலில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+