ஹய்யோ பயங்கரம்.. ஆஸ்பத்திரி வாசலிலேயே சுற்றி சுற்றி வந்த நாய்.. 8 மாத கருவாம்.. நடுங்கிய ராஜஸ்தான்
குழந்தை கருவை வாயில் கவ்வி நாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது
ஜெய்ப்பூர்: இணையத்தில் நாய் வீடியோ ஒன்று வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த பகீர் சம்பவம் தொடர்பான விசாரணையை ராஜஸ்தான் போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்கா, மெக்சிகோ சாலையில் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது.. நைட் நேரத்தில் ஒரு நாய் சாலையில் வேகமாக ஓடியுள்ளது. அதன் வாயிலே ஏதோ பெரிய பொருளை கவ்வியிருப்பதாக நினைத்தனர் அங்குள்ள மக்கள்..
ஆனால், அருகில் சென்று பார்த்தபிறகுதான் அது, ஒரு மனித தலை என்றே தெரியவந்துள்ளது.. இரவு நேரத்தில் வாயில், மனித தலையை பார்த்ததுமே, மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்..

தலை உன்னுடையது
ஆனால் அந்த நாய் அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்துள்ளது.. மான்டே எஸ்கோபெடோ என்ற நகரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் இந்த தலை கிடந்ததாம். மவுண்ட் எஸ்கோபெடோ என்ற பகுதியில் இறந்துபோன நபரின் மற்ற உடல் உறுப்புகள் சிதறி கிடந்தன.. ஆனால், இறந்தவர் யார் என்றே இதுவரை தெரியாமல் போலீசார் விழிபிதுங்குகிறார்கள்.. "அடுத்தது உன்னுடைய தலைதான்" என்ற வாசகம் ஒரு பலகையில் எழுதி தொங்க விடப்பட்டுள்ளதாம்..

பச்சிளம் சிசு
இப்படி எழுதி வைத்தவர்கள் அநேகமாக சைக்கோ பேர்வழியாக இருக்கலாம் அல்லது போதைக்கு அடிமையானவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ வெளியாகி மக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை தந்தது. அந்தவகையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சங்கனேரியில் அரசு பெண்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.. இந்த மருத்துவமனையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாய் சுற்றி சுற்றி திரிந்துள்ளது..

காம்பவுண்ட் சுவர்
அதன் வாயில், இறந்துபோன 8 மாதக் குழந்தைக் கருவை கவ்வியபடி சுற்றித் திரிந்திருக்கிறது... நாயின் வாயில் கவ்வி இருப்பது குழந்தை என்பது முதலில் தெரியவில்லை. அதற்கு பிறகுதான், சிசுவை கண்டு பதறிப்போய், அந்த நாயை பின்னாடியே துரத்தி பிடிக்க முயன்றனர்.. மக்கள் கூட்டம் விரட்டி வருவதை கண்ட அந்த நாய்,கருவை அங்கிருந்த கட்டிடத்தின் வாசலில் போட்டுவிட்டு, மருத்துவமனை சுவரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.. பின்னர் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக லால் கோத்தி போலீசுக்கு தகவலை சொல்லவும் அவர்கள் விரைந்து வந்தனர்...

ஆக்ஸிஜன் ஃபேக்டரி
குழந்தை கருவை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்... அந்த ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், அந்தக்கரு 8 மாத ஆண் குழந்தை என்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், அது யாருடைய குழந்தை என்று தெரியவில்லை.. இதுகுறித்து ஒரு போலீஸ் அதிகாரி சொல்லும்போது, "இறந்த குழந்தையின் குடும்பத்தினரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.. மருத்துவமனை வளாகத்திலுள்ள ஆக்ஸிஜன் ஃபேக்டரிக்கு பக்கத்திலேயே இந்த இறந்த கருவை கண்டுபிடித்தோம்..

லிஸ்ட்
ஆனாலும், அந்த இடத்தை சுற்றி எந்தவொரு சிசிடிவி கேமராக்களும் இல்லை. நவம்பர் 15-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளைப் பற்றி பதிவுசெய்த லிஸ்ட்டை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறோம்.. ஒருவேளை குழந்தை மருத்துவமனையில் இறந்து பிறந்திருக்கலாம்... அல்லது இறந்த கருவை திரும்ப எடுத்து செல்ல குடும்பத்தினர் தயங்கி, இங்கேயே பக்கத்தில் எங்காவது மண்ணில் புதைத்திருக்கலாம்... அதை நாய் தோண்டி எடுத்திருக்கலாம்... நாய் கடித்ததில் குழந்தையின் தலையில் பலமான காயங்கள் உள்ளன" என்றார்..!












Click it and Unblock the Notifications