காஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தில் அசத்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள்
Recommended Video
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எல்லைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனங்களை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
5-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களும் காலையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பின்னர் யோகாசனங்களை செய்தார்.
மேலும் முப்படையினரும் கடும் உறைபனியையும் கூட பொருட்படுத்தாமல் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
#WATCH Dog squad of Border Security Force performs yoga along with their trainers on #YogaDay2019 in Jammu. pic.twitter.com/TTN2vAgbeS
— ANI (@ANI) June 21, 2019
ஜம்மு நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய்களும் பங்கேற்றன. ராணுவ வீரர்கள் செய்த அத்தனை யோகாசனங்களையும் அச்சு பிசாகமல் செய்து அனைவரது பாராட்டுதல்களையும் மோப்ப நாய்கள் பெற்றன.
குதிரை மீது யோகாசனம்
#Haryana: Border Security Force's equestrian team performs Yoga on horsebacks at the BSF camp in Gurugram. pic.twitter.com/Vp7ytXqDRg
— ANI (@ANI) June 21, 2019
ஹரியானாவின் குருகிராமில் எல்லை பாதுகாப்புப் படையினர் குதிரையின் முதுகில் ஏறி நின்றும் அமர்ந்தும் படுத்தும் யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினர்..
#InternationalDayofYoga : Navy personnel perform Yoga on submarine INS Sindhudhvaj. pic.twitter.com/ZLUSTDe5AR
— ANI (@ANI) June 21, 2019
நீர்மூழ்கிக் கப்பல் மீது யோகா
கடற்படை வீரர்கள், ஐ.என்.எஸ். சிந்துஜா நீர்மூழ்கிக் கப்பலின் மீது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனங்களை செய்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications