சசிகலா புஷ்பாவை 6 வாரங்களுக்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை- ஆக. 29-ல் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை 6 வாரங்களுக்கு கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் வரும் 29-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சசிகலா புஷ்பா நேரில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடி போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மீது பாலியல் தொல்லை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Don't arrest Sasikala Pushpa, SC tells TN

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய சசிகலா புஷ்பா தரப்புக்கு அறிவுறுத்தியிருந்தது.

இதனடிப்படையில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர், சசிகலா புஷ்பா தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். ஆனால் ஆகஸ்ட் 17-ந் தேதியன்று மதுரையில் வழக்கறிஞர் முன்பாக முன்ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்திட்டதாக கூறியிருக்கிறார். ஆகையால் இது போலி முன்ஜாமீன் மனு என வாதிட்டார்.

இதனால் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக சசிகலா புஷ்பா தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆனால் இதை நிராகரித்த நீதிபதி, முன்ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது குறித்து வரும் 29-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சசிகலா புஷ்பா உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜரானால் தாம் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது; ஆகையால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் வாட்ஸ் அப்பில் தாம் சிங்கப்பூரில் இருப்பதாகவும் படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார். இதனிடையே இன்று சசிகலா புஷ்பாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,

- சசிகலா புஷ்பாவை 6 வாரங்களுக்கு கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

- மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் சசிகலா புஷ்பாவின் மனுவை நிராகரித்தது.

- அத்துடன் வரும் 29-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சசிகலா புஷ்பா ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

- சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விரைந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+