கையை உயர்த்தாதீர்கள், உயிரைக் கொடுங்கள்: கட்சியினருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
பூஜ்: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெளியே நடந்த வன்முறை சம்பவத்திற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் பாஜகவினருடன் மோதாமல் இருக்குமாறு தனது கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத்தை முன்னேற்றிவிட்டேன் என்று அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி கூறுவது உண்மையா என்பதை பார்க்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றுள்ளார். நேற்று அவர் மெஹ்சான் மாவட்டத்தில் உள்ள பெசராஜியில் இருந்து ரதன்பூருக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் தேர்தல் விதிகளை மீறியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது ஆம் ஆத்மி கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர். இதை பார்த்த போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,
ஆம் ஆத்மி கட்சியினரின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் என் கைதை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டிருக்கக் கூடாது. ஆனால் பாஜகவினர் தான் வன்முறையை தூண்டிவிட்டுள்ளனர். அவர்கள் தான் எங்கள் கட்சியினரை முதலில் தாக்கினர். மேலும் குஜராத்தில் எனது ஆதரவாளர்களை பாஜகவினர் தாக்கினர். என் கார் கண்ணாடியை அவர்கள் உடைத்தனர்.
பாஜகவினருடன் மோதும் போக்கை தவிர்க்குமாறு ஆம் ஆத்மி கட்சியினரை கேட்டுக் கொள்கிறேன். மேலும் உங்களின் கையை உயர்த்தாதீர்கள், மாறாக உயிரைக் கொடுங்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அஷுதோஷ்:
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் பத்திரிக்கையாளருமான அஷுதோஷ், முன்னாள் செய்தி தொகுப்பாளர் ஷாசியா இல்மி ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புள்ள 14 பேர் ஜாமீன் பெற்றனர். இன்று மதியம் போலீசார் அஷுதோஷ் மற்றும் இல்மியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications