பதவி கேட்டு அணத்தக் கூடாது.. பாஜக எம்.பிக்களுக்கு மோடி கண்டிப்பு
டெல்லி: அமைச்சர் பதவி கேட்டு லாபி செய்வதை பாஜக எம்.பிக்கள் கைவிட வேண்டும் என்று பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அமைச்சர் பதவி கேட்டு மோடியைப் பார்க்க பலரும் டெல்லியில் குவிந்து வருகின்றனர். மேலும் பல்வேரு ரூபத்திலும் அவர்கள் லாபி செய்து வருகின்றனர். இதனால் மோடி அப்செடாக்கியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கூட அவரைப் பார்க்க கர்நாடகத்திலிருந்து எதியூரப்பா, அனந்தகுமார் தலைமையில் ஆளுக்கு ஒரு கோஷ்டி வந்து மோடியைப் பார்த்தது. அவர்களின் கோரிக்கையைக் கேட்ட மோடி கடுப்பாகி, இப்படியெல்லாம் லாபி செய்வது எனக்குப் பிடிக்காது. இதை நான் ரசிக்கவில்லை என்று முகத்தில் அடித்தாற் போல கூறி விட்டாராம்.
இப்படி லாபி செய்வதற்குப் பதில் கட்சியை முன்னேற்றுவது குறித்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்குமாறும் கூறினாராம் மோடி.
ஆனால் மோடி இப்படிக் கூறியும் கூட பலர் தொடர்ந்து பதவிக்காக லாபி செய்தபடிதான் உள்ளனராம்.
தற்போது பாஜகவினரை விட கூட்டணிக் கட்சிகள்தான் பதவிக்காக அலைமோதியபடி உள்ளனராம். வழக்கமாக கூட்டணி ஆட்சி அமைவதாக இருந்தால் பெரிய கட்சிதான் சின்னக் கட்சியைக் கூட வலியக்கப் போய் கூப்பிட்டு பதவி தரும். ஆனால் தற்போது, பாஜக தனிப்பெரும்மையுடன் ஆட்சியமைப்பதால், யாரையுமே அது சீண்டவில்லை. இதனால்தான் பல கட்சிகளும் பாஜகவைத் தேடி ஓடி வந்தவண்ணம் உள்ளன.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications