ஆஹா.. இந்தியா எத்தனை அழகு.. இங்கேயே இருந்து விடுகிறேனே.. பாக். சிறுவனின் ஏக்கம்!

இந்தியா அழகாக உள்ளது, நான் இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என்று பாகிஸ்தானிய சிறுவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்தியாவிலேயே வாழ ஆசைப்படும் பாகிஸ்தானிய சிறுவன்- வீடியோ

    டெல்லி: இந்தியா அழகாக உள்ளதால் இங்கேயே தங்கிக் கொள்கிறேன், பாகிஸ்தான் செல்ல விருப்பம் இல்லை என்று அந்நாட்டு சிறுவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானை சேர்ந்தவர் அஷ்பாஃக் அலி (16). இவர் கடந்த ஆண்டு அட்டாரி- வாகா எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் எவ்வித ஆவணங்களும் இன்றி நுழைந்துவிட்டார். இதையடுத்து இவரை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Dont Want to go Back to Pakistan, India is Good, Says 16-year-old boy

    இந்நிலையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி 6 பாகிஸ்தானியர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இந்திய அரசு முடிவு செய்தது. அதில் எல்லைத் தாண்டி வந்த சிறுவன் அஷ்பாஃக் அலியும் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அந்த சிறுவன் இந்தியாவை விட்டு செல்ல மனமில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் 14 மாதங்கள் இங்கு தங்கிவிட்டேன். இந்தியா அழகாக உள்ளது. நான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை.

    எனக்கு இங்கு ஏதாவது வேலை போட்டு கொடுக்க வேண்டும். நான் இங்கு தங்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+