இலங்கைக்கு வரஹா கப்பல் வழங்கியதை யாருமே எதிர்க்கலையே- லோக்சபாவில் மத்திய அமைச்சர் இந்தர்ஜித்சிங்
டெல்லி: இலங்கைக்கு வரஹா போர்க்கப்பலை அன்பளிப்பாக வழங்கியதை யாரும் எதிர்க்கவில்லை என்று லோக்சபாவில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் வரஹா போர்க்கப்பலை இந்தியா அன்பளிப்பாக வழங்கியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் ஏற்கனவே இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கக் கூடாது; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தனை எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்கு வரஹா போர்க்கப்பலை அன்பளிப்பாக இந்தியா வழங்கியது.
இந்நிலையில் லோக்சபாவில் அ.தி.மு.க. எம்.பிக்கள் சிவகங்கை செந்தில்நாதன் மற்றும் கோவை நாகராஜன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு நேற்று பதிலளித்த பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் கூறியதாவது:
இந்தியக் கடலோரக் காவல்படையின் வரஹா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. பின் இந்த குத்தகை காலம் நீடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் வரஹா கப்பலை அந்நாட்டுக்கு அன்பளிப்பாக இந்தியா வழங்கியது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இருநாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் இக்கப்பல் வழங்கப்பட்டது.
இவ்வாறு ராவ் இந்தர்ஜித் சிங் கூறினார்.
விக்ரம் வகையைச் சேர்ந்த இந்த போர்க் கப்பலுக்கு இலங்கை கடற்படை, எஸ்எல்என்எஸ் சாகர என தற்போது பெயரிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இந்தியாவின் இந்த வரஹா கப்பல்தான் புலிகளுக்கு கொண்டுவரப்பட்ட பல ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் மூழ்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் ஆழ்கடல் ரோந்துப் படகு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, அவர்களின் கடல்வழி விநியோகங்களை தடை செய்வதில் முக்கிய பங்காற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications