100கிமீ வேகத்தில் போகும்போது குட்காவை துப்ப கதவை திறந்த டிரைவர்.. 4 முறை சுழன்று கார் மோசமான விபத்து
ராய்ப்பூர்: சுமார் 100 கிமீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது குட்காவை துப்ப கார் கதவை டிரைவர் திறந்ததால் அது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் பரவலாக இருந்தே வருகிறது. பல ஊர்களில் இதுபோல பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் என விதி இருந்தாலும் கூட யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இருப்பினும், இதுபோல எச்சில் துப்பும்போது அது சில மோசமான விபத்துகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

கார் விபத்து
அப்படியொரு சம்பவம் தான் சத்தீஸ்கரில் நடந்துள்ளது. அங்கு கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது குட்காவை துப்ப டிரைவர் கதவைத் திறந்துள்ளார். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.
குட்கா துப்பும்போது
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு கார் அதிவேகமாகச் சென்று கொண்டு இருந்த போது குட்காவை துப்ப டிரைவர் கதவைத் திறந்துள்ளார். அதுவும் சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்த போது குட்காவை துப்ப கதவைத் திறந்திருக்கிறார். இதனால் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியது.
பல முறை அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்த கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் கார் சாலையில் பலமுறை உருண்டு, பிற வாகனங்கள் மீதும் மோதியது. இதனால் அந்த கார்களின் டிரைவர்களும் காயமடைந்தனர்.
என்ன நடந்தது?
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "உயிரிழந்தவர் ஜாக்கி கெஹி (வயது 31) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சக்கர்பட்டா பகுதியைச் சேர்ந்த துணிக்கடை வியாபாரி. அவர் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட பிறகு தனது நண்பர் ஆகாஷ் சந்தானியை அதிகாலை 1.30 மணிக்குக் கால் செய்து தன்னை கூட்டிச் செல்லச் சொல்லியுள்ளார். ஆகாஷும் தனது நண்பர் பங்கஜ் சப்ராவுடன் ஜாக்கியை அழைத்து வரச் சென்றார்.
ஆகாஷ் காரை ஓட்டிய நிலையில், பங்கஜ் முன் இருக்கையிலும், ஜாக்கி பின் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். பிலாஸ்பூர்-ராய்ப்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆகாஷ் திடீரென குட்கா துப்ப கதவைத் திறந்தார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதியது. மேலும், அது பல முறை அப்படியே அந்தரத்திலும் சுழன்றது" என்றார்.
ஒருவர் பலி
பயணிகள் அனைவரும் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அந்தளவுக்கு கார் விபத்து வலிமையானதாக இருந்தது. இதில் ஜாக்கிக்கு மார்பு, தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஜாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆகாஷ் மற்றும் பங்கஜ் ஆகியோரும் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறு சில கார்களில் மோதியது. இதில் வேறு சிலரும் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அது மிக மோசமான விபத்தாக இருக்கிறது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications