அடங்காத பாகிஸ்தான்.. எல்லையில் ஊடுருவிய ட்ரோன்கள்? பரபரப்பான பார்டர்.. ரெடியான இந்திய ராணுவம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக, சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு கோடு (LoC, IB) பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் உடனடியாக எதிர்-ட்ரோன் பாதுகாப்பு நடவடிக்கைளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் ஜம்மு காஷ்மீரின் முன்னணி எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் பறப்பதை ராணுவம் கண்டறிந்ததாகக் கூறப்படும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ராணுவம் Counter-Unmanned Aircraft System எனப்படும் சிறப்பு தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி அந்த ட்ரோன்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது இதுகுறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் உபேந்திர த்விவேதி பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையியில், இந்த ட்ரோன் அத்துமீறல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் எல்லை
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இன்னும் பல தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவுக்கு எதிரான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் உபேந்திர த்விவேதி எச்சரித்திருந்தார். இதற்கு முந்தைய நாளில், ஜம்மு காஷ்மீரின் சம்பா, ராஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ட்ரோன்கள் பறந்ததாக பாதுகாப்புப் படைகள் தெரிவித்திருந்தன. அந்த ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் சில நிமிடங்கள் பறந்து, பின்னர் மீண்டும் பாகிஸ்தான் பகுதியை நோக்கி திரும்பியதாக அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தான் ட்ரோன் அத்துமீறல்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்தந்த பகுதிகளில் தரையிறங்கி தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ராஜௌரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் உள்ள கானியா-கல்சியான் கிராமத்திற்கு மேல் மாலை 6.35 மணி அளவில் ட்ரோன் பறந்ததை கண்ட ராணுவ வீரர்கள், நடுத்தர மற்றும் லேசான மெஷின் கன் ஆயுதங்களை பயன்படுத்தி வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், ராஜௌரி மாவட்டத்தின் தேரியத் பகுதியில் உள்ள கப்பர் கிராமத்தின் மேலாகவும் இன்னொரு ட்ரோன் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு
சம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதியில் உள்ள சக் பாப்ரால் கிராமத்தின் மேல், மின்னும் விளக்குடன் கூடிய ட்ரோன் போன்ற பொருள் சுமார் சில நிமிடங்கள் வானில் நிலைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோடு அருகே, டைன் பகுதியிலிருந்து டோபா நோக்கி பறந்த ஒரு ட்ரோனும் பாதுகாப்புப் படைகளால் கவனிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ராணுவம், காவல் துறை மற்றும் உளவுத்துறைகள் முழுமையாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர்
இதனிடையே, ராணுவ தின செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர த்விவேதி, 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்கிறது எனத் தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் எந்த விதமான தவறான முயற்சிகளை மேற்கொண்டாலும் இந்திய ராணுவம் தயங்காமல் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார். கட்டுப்பாட்டு கோட்டிற்கு அப்பால் குறைந்தது ஆறு தீவிரவாத முகாம்களும், சர்வதேச எல்லைக்கு அப்பால் இரண்டு முகாம்களும் இன்னும் செயல்பட்டு வருவதாகவும், அவற்றை இலக்காக கொண்டு நடவடிக்கை எடுக்கத் தயார் நிலையில் இந்திய ராணுவம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள்
'ஆபரேஷன் சிந்தூர்' மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு, மே 7 அன்று 22 நிமிடங்களில் தொடங்கி, மே 10 வரை 88 மணி நேரம் தொடர்ந்ததாகவும், இந்த நடவடிக்கையின் போது, ஒன்பது இலக்குகளில் ஏழு முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் 100 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். நாட்டின் முழு ஆதரவும் ராணுவத்துக்கு இருப்பதாகவும், எதிர்காலத்தில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் ஒருங்கிணைந்த முறையில் கடுமையாக அமையும் என்றும் அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications