போதை என்னும் 3டி பிரச்சனையில் இருந்து மீண்டு வா இளைய சமூகமே: ரேடியோவில் மோடி உரை
டெல்லி: போதைப் பொருள் உட்கொள்வது பலருக்கு ஸ்டைல் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரேடியோ உரையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக ரேடியோ மூலம் மக்களிடம் பேசியுள்ளார். மான் கி பாத் என்ற அந்த நிகழ்ச்சியில் அவர் போதைப் பொருள் பிரச்சனை பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

பிரதமர்
பிரதமர் ஏன் ரேடியோவில் பேசுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். கவலையை பகிர்ந்து கொண்டால் அது குறையும் என்றும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். போதைப் பொருளுக்கு அடிமையான குழந்தைகளால் அவதிப்படும் குடும்பபத்தாரின் பாடை பார்த்து வருத்தப்படுகிறேன்.

உதவி
போதைப் பொருள் பழக்கம் என்பது மன, சமூக, மருத்துவ பிரச்சனை ஆகும். போதைப் பொருள் பிரச்சனை குறித்து உதவி செய்ய கட்டணம் இல்லா ஹெல்ப்லைன் அறிமுகப்படுத்தப்படும்.

இளைஞர்கள்
நான் கடந்த முறை ரேடியோவில் பேசியபோது நாட்டின் இளைஞர்களை நினைத்து கவலைப்படுவதாக தெரிவித்தேன். சில மகன்கள், மகள்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதால் அவர்களின் குடும்பம் அவதிப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன்.

லீவ்
என்னிடம் வேலை செய்பவர்கள் லீவ் கேட்பார்கள். ஆனால் காரணத்தை தெரிவிக்க மாட்டார்கள். அன்பாக கேட்டபோது தான் அவர்களின் குழந்தைகள் போதைக்கு அடியானதை தெரிவித்தார்கள்.

போதை
போதை என்பது 3டி பிரச்சனை. அதாவது இருட்டு, அழிவு, பேரழிவு (Darkness, Destruction, Devastation) ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள். போதையை தள்ளி வைக்க விளையாட்டு வீரர்கள் போன்று மக்கள் தங்கள் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்.

தீவிரவாதம்
போதைப் பொருளை வாங்கும் முன்பு யோசியுங்கள். போதைப் பொருளுக்கு நீங்கள் கொடுக்கும் பணம் எங்கே செல்கிறது? அது தீவிரவாதம் மற்றும் மாபியாவுக்கு செல்லலாம். அவர்களின் குண்டுகள் நம் ராணுவ வீரர்களை துளைக்கிறது.

ஸ்டைல்
போதைப் பொருளை எடுத்துக் கொள்வது பலருக்கு ஸ்டைலாகிவிட்டது. அதை கூல் என்று நினைக்கிறார்கள். போதைப் பொருளுக்கு எதிராக நிற்க துணிச்சல் தேவை. இளைய சமுதாயம் போதையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றார் மோடி.

ரேடியோ
மோடி தனது முதல் ரேடியோ உரையில் கருப்பு பண பிரச்சனை பற்றியும், இரண்டாவது உரையில் சுத்தமான இந்தியா திட்டம் பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications