முட்டையில் இருந்து கோழி வந்துச்சா, கோழியில் இருந்து முட்டை வந்துச்சா.. கொலையில் முடிந்த வாக்குவாதம்
ஜகர்தா: இந்தோனேஷியாவில் நண்பர்கள் இருவர் மது அருந்தியபோது, கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் வழங்காததால் நண்பரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைக் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக மதுபோதையில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறிய, சிறிய பிரச்னைகளுக்கு கூட கொலைச் சம்பவங்கள் நடப்பது பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவில் முட்டையில் இருந்து கோழி வந்துச்சா, கோழியில் இருந்து முட்டை வந்துச்சா என்ற வாக்குவாதம் முற்றி நண்பரைக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் கதிர் மார்க்கஸ் (47) மற்றும் டிஆர். இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கதிர் மார்க்கஸை மது அருந்துவதற்காக டிஆர் கடந்த 24 ம் தேதி அழைத்துள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில், கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்துள்ளதாக என்று டிஆர் கேள்வி எழுப்பியுள்ளார். இது இருவருக்குமிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கதிர் மார்கஸ் இதுகுறித்து விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த டிஆர், கதிர் மார்க்கஸை பைக்கில் துரத்திச் சென்று பலமுறை தாக்கி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, மார்க்கஸ் உடல் கடந்த 26ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து டிஆர் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் குற்றம் நீரூபணமானால், கொலையாளிக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணை கிடைக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல, கடந்த ஆண்டு வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிய நண்பர் ஒருவரை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications