பெண்ணை வழிமறித்து நிர்வாணமாக நின்ற 'குடி'மகனுக்கு தர்ம அடி
தானே: தானேவில் பெண்ணை வழிமறித்து நிர்வாணமாக நின்ற நபரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நாலச்சோப்ராவைச் சேர்ந்தவர் சச்சினாம் சவுகான்(எ) வர்மா. வர்மாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் குடிபோதையில் வந்த போது பாரத் பென்தாரி பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை வழிமறித்தார். குடிபோதையில் ஒருவர் வழிமறித்த அதிர்ச்சியில் இருந்த பெண்ணின் கண் முன்பு அவர் தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நின்றார்.
இதனால் பேரதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு வந்தவர்கள் வர்மாவை பிடித்து அடித்து நொறுக்கினர். சிலர் அவர் மீது கல் வீசித் தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து விழுந்தார்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வர்மாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications