திருப்பதியிலும் விடாமல் விளாசும் மழை.. திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கம்.. பக்தர்கள் ஷாக்
அமராவதி: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருப்பதி கோயிலுக்குச் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, கடலூர், விழுப்புரம் உட்பட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கனமழை
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே தெற்கு ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திருப்பதி திருமலையில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அந்நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய சாலைகளிலான யுனிவர்சிட்டி ரோடு, ஏர் பை பாஸ் ரோடு ஆகிய சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்
இப்படித் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை நேற்று மூடப்பட்டது.. சாலை போக்குவரத்து மட்டும் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் தேக்கம்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியே வரக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

கனமழை
ரோட்டில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து 150 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை - புதுவை இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த பின்னரே மழையின் அளவு குறையும். இதற்கிடையே திருப்பதியில் பல இடங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும், சில இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மழை வெள்ளத்தால் அப்படியே அடித்துச் செல்லப்படும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications