Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸை விரட்டிய பெண்கள்.. பெண் டாக்டர் கொலையால் கொந்தளித்த கால்பந்து ரசிகர்கள்! பதறும் கொல்கத்தா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தான் இன்று திடீரென்று கால்பந்து ரசிகர்கள் நடத்திய போராட்டத்தால் கொல்கத்தாவில் நடைபெற இருந்த துரந் கோப்பைக்கான கால்பந்து போட்டி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவ படிப்பை படித்து வரும் மாணவி பயிற்சி டாக்டராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 8 ம் தேதி அவர் நைட் ஷிப்டில் பணியாற்றினார்.

kolkata crime foot ball

அதன்பிறகு அவர் ஓய்வறைக்கு சென்று படுக்க சென்றார். இந்நிலையில் தான் அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார்.

உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் மாணவியை துன்புறுத்தி பலாத்காரம் செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மாணவியின் கழுத்து எலும்பு முறிந்து இருந்ததோடு, அந்தரங்க உறுப்பு, முகம், உதடு, கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. இதன்மூலம் பெண் டாக்டர் துன்புறுத்தப்பட்டு இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது.

இதனால் இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் டாக்டர்கள் பணியை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் கூட கொல்கத்தாவில் பதற்றமான சூழல் தான் உள்ளது.

இந்நிலையில் தான் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் (உப்பு ஏரி மைதானம்) இன்று துரந் கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியில் மவுன் பாகன் மற்றும் கிழக்கு பெங்கால் அணிகள் மோத இருந்தன. இந்த போட்டியை காண ஏராளமான கால்பந்து ரசிகர்கள் வந்தனர். இந்த வேளையில் திடீரென்று கால்பந்து ரசிகர்கள் கால்பந்து மைதானத்தின் அருகே திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். தண்டனை வழங்குவதில் தாமதம் கூடாது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள், நர்ஸ்கள் உள்பட மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகப்படியான தண்டனை வழங்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தால் கால்பந்து மைதான பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் ஒன்றிணைந்து ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் ரசிகர்கள் போலீசாரின் பேச்சை கேட்கவில்லை. மேலும் பெண்கள் போலீசாரை அங்கிருந்து செல்லும்படி சைகை காட்டியதோடு கோஷமிட்டும் கூறினர். இதனால் வேறு வழியின்றி போலீசார் அமைதி காத்தனர்.

இதனால் போராட்டம் என்பது தொடர்ந்து நடந்து வந்தது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற உள்ள மவுன் பாகன் - கிழக்கு பெங்கால் அணிகள் இடையேயான கால்பந்து போட்டி என்பது ரத்து செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+