உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயலில் சிக்கி 27 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லக்னௌ: உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் தாக்கியதில் 27 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை கடுமையான புழுதிக் காற்றுடன் மழை பெய்தது. அப்போதுமரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. குடிசைகள் காற்றில் பறந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த புழுதிப் புயல் காரணமாக பரூக்காபாத்தில் 10 பேரும், பாரபங்கியில் 2 குழந்தைகள் உள்பட 6 பேரும், லக்னோ மற்றும் சீதாபூரில் தலா 3 பேரும், ஹர்டோய் மற்றும் ஜலானில் தலா 2 பேரும், பைசாபாத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications