சுழன்று வீசிய புழுதி புயல்.. மாலையிலேயே இருண்டு பீதியூட்டிய டெல்லி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று மாலை புழுதி புயல் வீசியதோடு, வானம் திடீரென கடுமையாக இருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் கடந்த பல நாட்களாக அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. இதனிடையே இன்று மாலை 5.30 மணிக்கு திடீரென டெல்லி மற்றும் புற நகர் பகுதிகளில் வானம் இருண்டு, புழுதி புயல் வீசியது. தென் டெல்லியின் பல பகுதிகளில் மழையும் பெய்தது.

 Dust storm strong winds hit Delhi

இதனால் காற்றின் ஈரப்பதம் 68 சதவீதம் வரை அதிகரித்தது. மாலையில் திடீரென இரவு போல இருட்டியதால், டெல்லிவாசிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனிடையே அடுத்த சில நாட்கள் வானிலை குளுமையாக காணப்படும் என்று டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் வெளியிட்ட தகவலில், புழுதி புயல் காரணமாக, சில விமானங்கள் டெல்லியில் தரையிறங்க முடியவில்லை, சில விமானங்கள் கிளம்ப முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+