உத்தர்கண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 விநாடிகள் நடுங்கிய வட இந்தியா
டெல்லியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இது உணரப்பட்டது.
டெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ரிக்டராக பதிவானது.
டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. குர்கான், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இது 30 விநாடிகள் அளவுக்கு இருந்தது.

உத்தர்கண்ட் மாநிலத்தில்தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. தலைநகர் டேராடூனுக்கு அருகே ருத்ரபிரயாக் பகுதிக்கு அருகே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இரவு சரியாக 10.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
டெல்லி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தர்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பூமிக்குக் கீழே 14.2 கிலோமீட்டர் ஆழத்திற்குள் பூகம்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் டிவீட் போட்டிருந்தார். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக அவர் அதில் கூறியிருந்தார்.
Earthquake in Delhi NCR. I pray for everyone's safety
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 6, 2017
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications