பிப்.18-ல் திரிபுரா; பிப். 27-ல் மேகாலயா, நாகலாந்தில் சட்டசபை தேர்தல்!
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.
டெல்லி: திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 18-ந் தேதி நடைபெறும் என்றும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3 மாநிலங்களிலும் மார்ச் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக் காலம் மார்ச் 6, மார்ச் 13 மற்றும் மார்ச் 14-ந் தேதிகளில் முடிவடைகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி ஆட்சியில் உள்ளது. பாஜகவும் இந்த அரசில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நாகாலாந்து மக்கள் முன்னணி, பாஜக இடையேயான கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்த கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருக்கிறது. மேகலாயா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அண்மையில் பாஜக வளைத்திருந்தது.
திரிபுராவில் கால் நூற்றாண்டுகாலமாக தொடர்ந்து இடதுசாரிகளின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்தார்.
திரிபுராவில் பிப்ரவரி 18-ந் தேதியும் மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ந் தேதியும் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும். இம்மூன்று மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications