ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதியை நாளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதியை நாளை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் தேதியை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனடிப்படையில் டெல்லியில் நாளை ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications