கோவா சட்டசபை: ஒரே கட்டமாக தேர்தல்.. பிப்ரவரி 14 இல் வாக்குப் பதிவு.. மார்ச் 10 இல் வாக்கு எண்ணிக்கை
கோவா: கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி ஆகும்.
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் சுற்றுலா தலமான கோவாவில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பிரமோத் சவாண்ட் இருக்கிறார். இந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் முடிவடைகிறது.

17 தொகுதிகளில் காங்கிரஸ்
கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது. இந்த மாநில சட்டசபையின் பெரும்பான்மை பலம் 21 ஆகும்.

பாஜக தலைமையில் ஆட்சி
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உதிரி கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் உரிமை கோரியது. இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.

தட்டி பறித்த பாஜக
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராடியது. எனினும் ஒன்றும் நடைபெறவில்லை. முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதை அடுத்து பிரமோத் சாவந்த் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தற்போது பாஜகவின் பலம் 26 ஆக உள்ளது. 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸின் பலம் 2 ஆக தேய்ந்துவிட்டது. மற்ற 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இப்படி காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டியதை பாஜக தட்டி பறித்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications