இரட்டை இலை சின்னம் வழக்கு: சசிகலா உட்பட 4 பேருக்கு நோட்டீஸ்- அக். 5ல் இறுதி விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அக்டோபர் 5-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா, ஓபிஎஸ், மதுசூதனன், தினகரன் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 5-ந் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஓபிஎஸ், சசிகலா அணிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர், கட்சி கொடி ஆகியவை முடக்கப்பட்டன.

பொதுக்குழு
பின்னர் இரு அணிகளும் இரட்டை இலை சின்னமும் கட்சியும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோரி பல்லாயிரக்கணக்கான மனுக்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தன. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டின.

தினகரன் தரப்பு மனு
சசிகலாவை அதிமுக நியமனப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் தரப்பு தங்களை கேட்காமல் இரட்டை இலை சின்ன வழக்கில் முடிவெடுக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தது.

வழக்குகள்
மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ்
இந்நிலையில் மதுசூதனன், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இன்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-5ல் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்கள் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 29-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்.5ல் இறுதி விசாரணை
மேலும் அனைவரும் அக்டோபர் 4-ந் தேதி தேர்தல் ஆணையத்திடம் நேரில் ஆஜராக வேண்டும். அக்டோபர் 5-ந் தேதியன்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications