சசிகலா பொதுச்செயலர் விவகாரம் முடிவடையாமல் தீர்ப்பு தருமா தேர்தல் ஆணையம்?
சசிகலா, ஓபிஎஸ் அணியின் வாதங்களுக்குப் பின்னர் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கவே வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்ற டெல்லி வட்டாரங்கள்.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் முடக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஓபிஎஸ் அணி மனு கொடுத்தது. இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

டெல்லியில் வாதங்கள்...
இதனடிப்படையில் டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் முன்பாக இரு அணி சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த வாதங்களைக் கேட்ட பின்னர் தேர்தல் ஆணையம் தமது முடிவை அறிவிக்க உள்ளது.

கோர்ட்டில்...
தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடையவும் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கு ஒதுக்கினாலும் மற்றொரு அணி நீதிமன்றப் படிகளேற வாய்ப்புண்டு.

இரட்டை இலை சின்னம் முடக்கம்?
இதனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால் தற்போதைக்கு இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் ஒதுக்காமல் முடக்கி வைக்கலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாம். ஏனெனில் தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான விவாதம் மட்டுமே நடைபெறுகிறது. சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட விவாதம் பின்னர் நடைபெற உள்ளது.

தினகரன் போட்டியில்லை?
அந்த விவாதமும் நடைபெற்று முடிந்த பின்னர் இரட்டை இலை, சசிகலா நியமனம் தொடர்பான இறுதியான முடிவை அறிவிக்கலாம் என்பது தேர்தல் ஆணையத்தின் திட்டம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் ஏற்கனவே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications