5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
டெல்லி: கிரிமனல் வழக்குகளில் 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தற்போது தேர்தல் ஆணையம் இது தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், பொது மக்களின் நலன் கருதி ஒருவர் மீது 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் நடப்பதற்கு 6 மாதத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்கு மட்டுமே இத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜூலையில் இருந்து தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications