எங்க அதிகாரிகளையே கைது செய்வீங்களா? ராஜஸ்தானில் இன்று 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு நடுவே அமலாக்கத்துறை இன்று 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது. ராஜஸ்தான் தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல அமைச்சர்களை இலக்கு வைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் மகனுக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் ஏலச் சீட்டு மோசடி வழக்கில் குற்றவாளிகளை தப்பி வைக்க லஞ்சம் பெற்றதாக 2 அமலாக்கத்துறை அதிகாரிகளை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி கைது செய்தனர். ரூ15 லட்சம் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பிடிபட்டதாக படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்.
இதனைத் தொடர்ந்து இன்று ராஜஸ்தானில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், பொது சுகாதார பொறியியல் துறை ஆகியவற்றில் நடந்த ஊழலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறி இந்த சோதனையை அமலாக்கத்துறை நடத்தியது. ராஜஸ்தான் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுபோத் அகர்வாலுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது. இதே வழக்கில் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ஜெய்ப்பூர், ஆல்வார், நீம்ரானா, பெஹ்ரார் ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. அப்போது 12 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தீஸ்கரிலும் ரெய்டு: ஜல் ஜீவன் குடிநீர் திட்ட ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17-ந் தேதி இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மிரட்டலால் அங்கு பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், பிலாய் பகுதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இச்சோதனைகளின் போது கணக்கில் வராத ரூ4.92 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications